ஜோதிமணிக்கு ஆதரவாக களத்தில் குதித்த செந்தில் பாலாஜி ஒரே கேள்வியால் அடங்கிய பரிதாபம் !!

பிரதமர் மோடியை கல்லால் அடிப்பதாக விமர்சனம் செய்த காங்கிரஸ் எம் பி ஜோதிமணியை பாஜகவை சேர்ந்த கரு நாகராஜன் கடுமையான முறையில் பதிலடி கொடுத்தார், ஜோதிமணி பிரதமர் குறித்து இவ்வாறு பேசுவது அவர் நாடாளுமன்ற உறுப்பினரா இல்லை தரம்கெட்ட பெண்மணியா என கடுமையாக விமர்சனம் செய்தார்.

Loading...

இந்நிலையில் பிரதமரை தரக்குறைவாக விமர்சனம் செய்த ஜோதிமணிக்கு எதிராக பாஜகவினரும், ஜோதிமணியை விமர்சனம் செய்த கரு நாகராஜனை காங்கிரஸ் கூட்டணி கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர், இந்நிலையில் ஜோதிமணியின் அரசியல் நண்பரும் எம் எல் ஏ வுமான செந்தில் பாலாஜி ஜோதிமணிக்கு ஆதரவாக வெகுண்டு எழுந்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- 6,95,697 மக்கள் ( 63%) வாக்களித்து, 420,546 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற, மக்கள் பிரதிநிதி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் S.ஜோதிமணி அவர்கள், 23 ஆண்டுகள் பொதுவாழ்வில் நேர்மையையும் கண்ணியத்தையும், தூய்மையையும் தொடர்ந்து கடைப்பிடிப்பவர். ஒன்றிய குழு உறுப்பினராக தனது அரசியல் வாழ்வை தொடங்கி, கடின உழைப்பால் இன்று நாடாளுமன்றத்திற்க்கு சென்றவர். விவசாய குடும்பத்தில் பிறந்து எளிய முறையில் வாழ்ந்து மக்களின் செல்வாக்கை பெற்ற S.ஜோதிமணி மீது,

Loading...

News 7 தொலைகாட்சி விவாதத்தில் நாகரீகமற்ற முறையில் பேசியுள்ள கரு.நாகராஜன் அவர்களின் பேச்சு, கடும் கண்டனத்திற்கு உரியது. கொரோனோ தொற்று காலத்தில், செயல்படாத மோடி, எடப்பாடி அரசின் மீதான, மக்களின் எண்ணத்தை, நேரலையில் பிரதிபலித்த, S.ஜோதிமணி மீது, முறையான பதிலை அளிக்க தவறி, ” ஆட தெரியாதவன் கூடம் கோணல் என்றானாம் ” என்பது போல, நேரலையில் பதில் அளிக்க திராணி இல்லாமல் அவர் மீது, நாகரீகமற்ற முறையில் பேசியுள்ளார் கரு.நாகராஜன்.

விவாதத்தில் அதை முறைப்படுத்த வேண்டிய News 7 தொலைகாட்சி, கரு.நாகராஜனை தொடர்ந்து பேச அனுமதியளித்தது கண்ணியமற்ற செயல். தொடர்ந்து அவர் மீது நாகரீகமற்ற விமர்சனங்களை மேற்கொள்கின்றனர் பாஜகவினர். இதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். விரைவில் இதற்க்கு ஒரு முடிவை காலமே பாஜகவினருக்கு வழங்கும். Nota வை நம்பிய மக்கள் கரு.நாகராஜனை நம்பவில்லை. மேலும் கரு.நாகரராஜன் பொதுவாழ்வுக்கு அர்த்தமற்றவர் என்பதை தேர்தலில் மக்களே விளக்கியுள்ளனர். 63% மக்களின் ஆதரவு பெற்ற S.ஜோதிமணி எங்கே..? NOTA யை விட கீழான வாக்குகளை பெற்ற கரு.நாகராஜன் எங்கே..? மக்கள் தீர்ப்பே.. மகேசன் தீர்ப்பு..! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..? என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் செந்தில்பாலாஜி பதிவிற்கு கீழே பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

1) கருணாநிதி இந்திரா காந்தி அவர்களை பேசினாரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
கருணாநிதி ஜெயந்தி நடராஜனை பேசினாரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
2) கருணாநிதி காமராஜர் அவர்களை பார்த்து கருவாட்டு காரி மகன் என்றாரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
3) கருணாநிதி காமராஜர் அவர்களை பார்த்து எருமை தோலன் என்றாரே அது தரங்கெட்டதா தெரியவில்லையா ?
4) தயாநிதி மாறன் தலித் மக்களை பற்றி பேசிய பேச்சு தரங்கெட்டதா தெரியவில்லையா ?
5) எஸ் ஆர் பாரதி பேசிய பேச்சு தரங்கெட்டதா தெரியவில்லையா ?
பிரதமரை அசிங்கமாக பேசிய பிரசன்னா பேச்சு அது தரங்கெட்டதா தெரியவில்லையா ? என கேள்வி கேட்க?

பதில் சொல்லமுடியாமல் அந்த கேள்விகளை செந்தில்பாலாஜி அணியினர் நீக்கி விடுகின்றனர், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜோதிமணி செந்தில்பாலாஜியை அதிமுக வேட்பாளராக இருந்த போது மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து அவருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

மணல் திருடன் என பொருள்பட ஜோதிமணி பேசிய பேச்சை போட்டு இப்போது ஜோதிமணி பேசிய தகவல் சரியா நீங்கள் மணல் திருடரா என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர், பல கட்சிகளுக்கு மாறிய செந்தில் பாலாஜி இதற்கு பதில் சொல்லமுடியாமல் அமைதியாகிவிட்டார்.

இந்நிலையில் பிரதமரை விமர்சனம் செய்த ஜோதிமணிக்கு அவரது பாணியில் பதிலடி கொடுத்த கரு நாகராஜனுக்கு பாஜகவினர் பாராட்டுகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2640 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*