அவரை பார்த்து என்ன வார்த்தை சொன்ன கடுப்பான ஜோதிமணி !

நாங்குநேரி.,

Loading...

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து கோபப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்னர் விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற்றது அப்போது பேசிய சீமான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் நோக்குடன்தான் ராஜிவ் காந்தியை கொலை செய்தோம் என்று சர்ச்சையாக பேசியது மட்டுமல்லாமல், இந்திய ராணுவம் குறித்தும் அவதூறாக பேசினார் இதனால் பலரும் சீமானை கண்டித்து வர, தமிழகத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் பெயருக்கு புகார் ஒன்றிணை காவல்நிலையத்தில் கொடுத்துவிட்டு ஒதுங்கி விட்டது.

Loading...

அதேபோல் கடமைக்கு தானும் அறிக்கை ஒன்றை விட்டே ஆகவேண்டும் என ஜோதிமணியும் வெளியிட்டுள்ளார்., அதில் :-

முன்னாள் பிரதமர் ராஜீவை கொலைசெய்தது தாங்களே என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்
சீமான் மீது வழக்குப்பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் உடனடியாக காவல்துறை கைது செய்யவேண்டும். பிஜேபி/ அதிமுக ஆட்சியின் இயலாமையை, அவலத்தை இதைவிடவும் எப்படிப் புரிந்துகொள்வது?

முன்னாள் பிரதமர் ராஜீவை கொலைசெய்தது தாங்களே என்ற ஒப்புதல் வாக்குமூலம் வழியே சீமான்,ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் நிரந்தரமாக சிறையில் இருக்க ஏற்பாடு செய்கிறார் என்பது வெளிப்படை. அப்பொழுதானே அரசியல் பிழைப்பும்,வெளிநாடுவாழ் அப்பாவி இலங்கைத் தமிழர்களிடம் நிதி வசூலும் சிறப்பாக நடக்கும்!

இவ்வாறு ஜோதிமணி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு பலரும் அவரது facebook பக்கத்தில் இப்பயாவது கோவம் வந்ததே “இனி எத்தனை தலை உருள போகிறதோ” என கிண்டல் செய்து வருகின்றனர்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*