ஜோதிமணி அவமானப்பட்டதால் வேறு வழியின்றி புது முடிவை அறிவித்த திமுக கூட்டணி !

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தான் பங்கேற்கும் விவாதங்களில் எப்போதும் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை சேர்ந்தவர்களை பல நேரங்களில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்யக்கூடியவர்.

Loading...

அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் மோடியை கல்லால் அடித்திருப்பார்கள் என மிகவும் சர்ச்சையாக பேச அதற்கு பாஜகவை சேர்ந்த கரு நாகராஜன் பதிலடி கொடுத்தார் ஜோதிமணி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரா இல்லை தரம்கெட்ட பெண்மணியா என தெரியவில்லை பிரதமரை கல்லால் அடிப்போம் என்று கூறுவது சரியா என கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் சர்ச்சையாக விமர்சனம் செய்து கொண்டனர் இந்த சூழலில்தான் ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து புதிய முடிவை அறிவித்துள்ளன அதில் :-

Loading...

தமிழக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் ஒப்புதலுடன் விடுக்கப்படும் கூட்டறிக்கை:

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் செல்வி எஸ்.ஜோதிமணி அவர்களை இழிவுபடுத்துகிற வகையில் பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் பேசியதை அநாகரீகத்தின் உச்சகட்டமாக கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். நீண்டகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினர் மிக மிக கேவலமான முறையில் விவாதத்தில் பங்கேற்று வருவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.இத்தகைய போக்கின் தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையில் செல்வி ஜோதிமணி அவர்களை தரக்குறைவாக கரு.நாகராஜன் பேசுவதற்கு நெறியாளர் அனுமதித்தது மிகுந்த வேதனைக்குரியது.

அந்த விவாதத்தை பார்த்தவர்கள் அனைவருமே பெரும்பாலான நேரம் கரு.நாகராஜனுக்கு ஏன் வழங்கப்பட்டது என்கிற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது. வரம்புமீறி நாகரிகமற்ற முறையில் பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து நெறியாளர் முற்றிலும் தவறிவிட்டார் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறோம்.தொலைக்காட்சி விவாதத்தில் மக்களவை உறுப்பினர் என்றோ, பெண் என்றோ பாராமல் செல்வி எஸ்.ஜோதிமணி அவர்களை தரம்தாழ்ந்து பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிற வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சி செயல்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். 

எனவே பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.வரம்புமீறி நாகரிகமற்ற முறையில் பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து நெறியாளர் முற்றிலும் தவறிவிட்டார் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறோம்.

தொலைக்காட்சி விவாதத்தில் மக்களவை உறுப்பினர் என்றோ, பெண் என்றோ பாராமல் செல்வி எஸ்.ஜோதிமணி அவர்களை தரம்தாழ்ந்து பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிற வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சி செயல்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஜோதிமணிக்கு ஆதரவாக விவாதங்களில் பங்கேற்பதில்லை என்ற முடிவை திமுக கூட்டணி எடுத்துள்ள நிலையில் இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2699 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*