தொடர் எதிர்ப்பு பின்வாங்கிய ஜோதிமணி !! அப்படிப்பட்டவள் நான் இல்லை என பல்டி !!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தொலைக்காட்சி நேரலையில் பிரதமரை தரக்குறைவாக பேசி பின்பு பாஜக நிர்வாகி கரு. நாகராஜனிடம் நேரலையில் வாங்கி கட்டிக்கொண்டு பாதியில் வெளியேறினார்.

Loading...

வெளியேறியவர் தன்னை பெண் என்பதால் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகவும், இனி பாஜகவினர் பங்கேற்கும் விவாதங்களில் பங்குபெற போவதில்லை என பேசி சமூக வலைத்தளங்களில் I STAND WITH JOTHIMANI என அவரே ஆதரவு திரட்டினார் , இதன் பிறகு தான் பலருக்கும் விவாதத்தில் என்ன நடந்தது என்பது தெரியவந்தது.

தாங்கள் களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை என்றால் பிரதமரை கல்லால் அடுத்து மக்கள் விரட்டுவார்கள் என ஜோதிமணி பேசியிருந்தார் அதற்கு பதிலடியாகத்தான் ஜோதிமணி ஒரு எம் பி யா இல்லை தரம் தாழ்ந்த பெண்ணா என்று விமர்சனம் செய்தார், ஆனால் தான் பேசியதை மறைத்து சமூக வலைத்தளங்களில் அனுதாபம் தேடிய ஜோதிமணியின் அரசியல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

Loading...

விவாதத்தில் ஜோதிமணி பிரதமரை கல்லால் அடிப்பார்கள் என்று பேசியது மிக பெரிய வன்முறையை தூண்டும் செயல் என்றும் 130 கோடி மக்களின் பிரதிநிதியை மிகவும் வன்முறையை தூண்டி அவமானப்படுத்தும் முயற்சி என்று பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர், அதோடு மட்டுமல்லாமல் ஜோதிமணி மீது காவல் நிலையத்தில் வன்முறையை தூண்டுவதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் யூடுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நீங்கள் பிரதமரை கல்லால் அடிப்பதாக கூறியது எந்த வகையில் நியாயம் என கேள்வி கேட்கப்பட்டதற்கு, நான் அவ்வாறு கூறவே இல்லை நான் ஒரு காந்தியவாதி, தனியாக போராடும் பெண் அவ்வாறு கூறவே இல்லை எனது கருத்திற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் எனவும் நான் அப்படிப்பட்டவள் இல்லை என கூறி வழக்கமாக தான் பேசும் தலைக்கனமான பேச்சில் இருந்து பின்வாங்கினார்.

அதற்கு காரணம், இதற்கு முன்னரும் பிரதமரை ஓசி பிரியாணி சாப்பிடுபவர் என தரக்குறைவாக விவாதத்தில் பேசி விவாதத்தை தொகுத்து வழங்கிய நெறியாளர் குணசேகரன் நீங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதற்குரிய தரத்தில் பேசவும் என கூறியிருந்தார், மேலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் ஜோதிமணிக்கு எதிரான கருத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமரை வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியது அதிர்ச்சி அளிப்பதாகவும் ஜோதிமணியின் பேச்சினை இந்தியில் மொழிபெயர்த்து பகிர்ந்தனர், இதனையடுத்துதான் நீலிக்கண்ணீர் வடித்த ஜோதிமணிதான் பிரதமரை அவ்வாறு குறிப்பிடவில்லை என பல்டி அடித்துள்ளார்.

ஜோதிமணி பாஜகவினர் பங்கு பெரும் விவாதத்தில் பங்கு பெறப்போவதில்லை என்று கூறியுள்ள நிலையில், இனி ஜோதிமணியை அழைக்கப்போவதில்லை என சில ஊடகங்களும் முடிவு எடுத்துள்ளதாம், முன்பெல்லாம் தமிழகத்தில் சாதாரணமாக பிரதமரை விமர்சனம் செய்துவிட்டு கடந்து போவார்கள் ஆனால் இப்போது நாடு முழுவதும் எதிர்ப்பு உண்டாகும் நிலைக்கு பாஜகவினர் எடுத்து சென்று பேசியவரை காவல் நிலையத்தில் நிறுத்து விடுகிறார்கள்.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*