சர்ச்சை பேச்சு ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை !! U

காங்கிரஸ் எம் பி ஜோதிமணி நேரலை நிகழ்வில் தரம்கெட்ட வகையில் பேசி அதே பாணியில் பதிலடியினை பெற்று தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.

Loading...

தனியார் தொலைக்காட்சியில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து விவாத நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் பாஜக சார்பில் கரு நாகராஜன், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி எம் பி, திமுக சார்பில் கலாநிதி எம் பி, இன்னும் சிலர் கலந்து கொண்டனர், வழக்கத்திற்கு மாறாக விவாதத்தில் ஜோதிமணி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார்.

ஒரு கட்டத்தில் களத்தில் நின்று வேலை பார்க்காத மோடியை மக்கள் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள் என சந்தோஷப்படுங்கள் என, வேண்டுமென்றே கலவரத்தை உண்டாக்கும் வகையில் பேசினார், இது நேரலையில் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பலரை அதிர்ச்சி அடைய செய்தது.

Loading...

அதனை அடுத்து பாஜக சார்பில் கலந்து கொண்ட கரு நாகராஜன் ஜோதிமணியை கடுமையாக விமர்சனம் செய்தார், ஜோதிமணி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரா இல்லை தரம்கெட்ட பெண்மணியா என தெரியவில்லை என கூற, அதற்கு மூன்றாம் தர மனிதர்களுடன் விவாதத்தில் பங்கேற்க முடியாது என கரு நாகராஜனை விமர்சனம் செய்து வெளியேறினார்.

மறுமுனையில் கரு நாகராஜன் ஜோதிமணி நீதான் ஒரு மூன்றாம் தர பெண்மணி என கடுமையாக விமர்சனம் செய்தார், தற்போது இரண்டு தரப்பு மீதும் இருவரும் குற்றசாட்டுகளை முனவைத்த நிலையில் பிரதமரை கல்லால் அடிக்கவேண்டும் என கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க பாஜக பாராளுமன்ற குழு மூலம் சபாநாயகருக்கு புகார் அளிக்க படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம் பி ஜோதிமணி தன்னை தாக்கியதாக பாஜக எம் பி சங்கீதா சிங் தியோ மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார், மேலும் காயங்கள் உண்டான ஆதாரங்களுக்கான மருத்துவ ஆதாரங்களையும் சமர்ப்பித்து இருந்தார், அந்த புகார் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது ஜோதிமணியின் பிரதமர் குறித்த சர்ச்சை பேச்சிற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என கூறப்படுகிறது.

முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள ஜோதிமணி ஆணவத்தில் இது போன்று பேசிவருவது நிச்சயம் எதிர்வினையை கொடுக்கும்.

©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2700 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*