அப்படி போடு !!சீன் போட்ட ஜோதிமணிக்கு ஆப்பு அடித்த பாஜகவினர் !!!

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் ஜோதிமணி மற்றும் கரு நாகராஜன் இருவருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சை பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் விவாதமாகி வந்த சூழலில் தற்போது வேறு கட்டத்தை எட்டியுள்ளன.

Loading...

தனியார் தொலைக்காட்சியில் நேற்று (17/05/20) இரவு நடைபெற்ற விவாதத்தில் பாஜகவை சேர்ந்த கரு நாகராஜன் காங்கிரஸ் எம் பி ஜோதிமணியை தவறாக விமர்சனம் செய்ததாக கூறி காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கண்டித்து வந்தனர், இந்த சூழலில் இன்று காலையில்தான் பலருக்கு உண்மையான விவாதத்தின் தொகுப்பு கிடைத்தது.

ஜோதிமணி தொடக்கம் முதலே சர்ச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி வந்த சூழலில் திடீர் என பிரதமரை கல்லால் அடித்திருப்பார்கள் என்று ஏக வசனத்தில் வன்முறையை உண்டாக்கும் விதமாக பேசியிருந்தார், அதனை தொடர்ந்து கரு நாகராஜன் பிரதமரை தரக்குறைவாக விமர்சனம் செய்த ஜோதிமணி ஒரு தரம் கெட்ட பெண்மணி என விமர்சித்துள்ளார்.

Loading...

இந்நிலையில் ஜோதிமணிக்கு ஆதரவு தெரிவித்த பலரும் பிரதமரை விமர்சனம் செய்த விதம்தான், நாகராஜன் ஜோதிமணியை விமர்சிக்க காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர், பலருக்கும் உண்மை தெரியவருவதை ஒட்டி ஜோதிமணி கலக்கத்தில் இருக்கும் நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜோதிமணியை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் கண்டன சுவரொட்டியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர், அதில் ஜோதிமணியை காவல்துறையினர் கைது செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஜோதிமணி மீது வழக்குகள் பதியபட்டு வருகிறது, எப்போதும் விளம்பர பிரியரான ஜோதிமணி தன்னை விளம்பர படுத்தி கொள்ள போட்ட திட்டங்கள் தற்போது அவருக்கு வினையாகி போகிவிட்டதை நினைத்து அடுத்து என்ன செய்வது என முழித்து வருகிறாராம்.

முன்பு போல் தமிழகத்தில் பிரதமரை தவறாக விமர்சனம் செய்தால் மேடையிலேயே தாறு மாறாக கிழித்து தொங்கவிட தமிழக பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம், ஆமாம் தமிழக காவல்துறை ஜோதிமணியை கைது செய்யுமா?

©TNNEWS24

Loading...
About Tnnews24 2640 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*