Connect with us

#24 Exclusive

JNU தாக்குதல் நடத்தியது யார் சஸ்பெக்ட் லிஸ்ட்டை வெளியிட்டது காவல்துறை கனிமொழி சந்தித்த பெண் சிக்கினார்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடைபெற்ற சம்பவம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி குற்றவியல் DCP, முக்கிய ஆதாரங்களை வெளியிட்டார் அதில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கனிமொழி உள்ளிட்ட பலரும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வரும் JNU இடதுசாரிய சங்க தலைவி ஆசி கோஸ் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

டெல்லி ஜவாஹர்லால் பல்கலை கலகத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்று ஆனால் இந்த முறை பல்கலைக்கழக துணை வேந்தர் அதிரடி மாற்றங்களை செய்ய தொடங்கினார், அதில் ஒருபகுதியாக ரூம் வாடகை மாதம் 50 ரூபாய் வரை கொடுத்து வந்ததை 300 ரூபாயாக உயர்த்தினார், விமானங்களில் பயணம் செய்து.டெல்லிக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு 300 ரூபாய் அதிகம் என்று போராடினார்கள்.

அதன் எதிரொலியாக சில மாணவர்கள் போராட்ட காரர்களை தவிர்த்து வருகின்ற தேர்விற்கு படிக்க ஆயத்தம் ஆனதாகவும் அதனை பொறுக்க முடியாத போராட்ட காரர்கள், தற்போதைய JNU மாணவர் தலைவி தலைமையில் வந்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்த பட்டது, ஆனால் தனக்கு தலையில் அடிபட்டுள்ளதாக கூறி தன்னை ABVP மாணவ அமைப்பினர் தாக்கியதாக அவர் ஒரு புகாரை கொடுத்தார்.

Loading...

இந்த சூழலில்தான் டெல்லியில பெரியார் விடுதியில் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த சந்தேக பட்டியலை டெல்லி காவல்துறை ஆதாரங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது அதில் மாணவ தலைவி கோஸ் பெயரும் இடம்பெற்றுகிறது, இவரைத்தான் திரை பிரபலங்கள் முதல் கனிமொழி வரை அனைவரும் துக்கம் விசாரித்து வந்தார்கள் இந்த சூழலில் தாக்குதலுக்கு மூளையாக செயலபட்டதே அவராக இருக்குமோ என்று டெல்லி காவல்துறை புகைப்படத்தை வெளியிட்டுள்ளதால்.

Loading...

யாரெல்லாம் போராட்டத்தில் பங்கேற்றார்களோ இப்போது அதிர்ச்சி அடைந்து உள்ளார்களாம் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இதற்குதான் எந்த விசயத்துக்கு முழு முடிவு தெரியாமல் போராட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார், பாஜக மீது பழியை போட்ட திமுக கம்யூனிஸ்ட் சாயம் வெளுத்துவிட்டதோ?

©TNNEWS24

Loading...

Trending