ஜார்கண்ட் மாநிலத்தில் யாராவது ஆட்சி கவிழும் என எதிர்பார்த்திருப்பார்களா? எல்லாம் காங்கிரஸ் செய்த வினை?

81 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜகவை வீழ்த்தி JMM மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது 30 இடங்களை ஜே எம் எம் கட்சியும் 16 இடங்களை காங்கிரஸ் கட்சியும் பிடித்தன. இந்நிலையில்தான் ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா மாநில முதல்வரை நேரடியாக டெல்லிக்கு 6 முறை அழைத்து உத்தரவு போட்டிருப்பது விரிசலை உண்டாகியுள்ளது.

Loading...

மத்திய பிரதேசம் மகாராஸ்டிரா ஜார்கண்ட் மாநிலங்களில் அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்து விட்டது. மிக சுலபமாக ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு மகாராஸ்டிரா ஜார்கண்ட்டைவிட மத்திய பிரதேசத்தில் தான் அதிகமாக இருந்தாலும் மகாராஸ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில்தான் பிஜேபி உடனடியாக ஆட்சிக்கு வர விரும்புகிறது.

அதிலும் இந்தியாவின் நம்பர்-1 மாநிலமான மகாராஸ்டிரா வை விட குட்டி மாநிலமான ஜார்கண்ட்டில் ஆட்சியை கைப்பற்றவே பிஜேபி முனைப்புடன் இருக்கிறது. இதற்கு காரணம் இப்பொழுது காங்கிரஸ் கஜானாவுக்கு செல்லும் பணம்பெருமளவில் ஜார்கண்ட்டில் இருந்து தான்செல்கிறது.

Loading...

சுயேச்சை எம்எல்ஏ வாக இருந்து காங்கிரஸ் துணையுடன் முதல்வராகி பல ஆயிரம் கோடிகளை சுருட்டிய மதுகோடா மண்ணான ஜார்கண்டில் இருந்து தான் காங்கிரஸ் இப்பொழுது அள்ள நினைக்கிறது .இதற்கு
செக் வைக்க விரும்பும் பிஜேபி முதலில் ஜார்கண்டில் தான் ஆட்சியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜார்கண்ட் மாநிலம் நிறைய கனிம வளம் நிறைந்த மாநிலம் மட்டுமல்லாது அரசியல் கட்சிகளுக்கு கரண்சியை அள்ளி கொடுக்கும் மாநிலங்களில் கர்நாடகா மகாராஸ்டிராவுக்கு
இணையான மாநிலம்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு படி அளந்து வந்த கர்நாடகாவை பிஜேபி கைப்பற்றி விட்டதால் விரக்தியில் இருந்த சோனியா வுக்கு பிஜேபி செய்த சில தவறுகளின் மூலமாக
ஜார்கண்ட் மற்றும் மகாராஸ்டிரா மாநில ஆட்சி அதிகாரங்கள் மடியில் வந்து விழுந்தவுடன் மீண்டும் மமதை தலைக்கேறி விட்டது.
மகாராஸ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவையே அடிமையாக்கி அழகு பார்க்கும் சோனியாவுக்கு ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேம ந்த் சோரன் எம்மாத்திரம்? காங்கிரஸ் ஜார் கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு உருவாகி இரண்டு மாதம் கூட நிறைவடையாத நிலையில் இதுவரை 6 முறைக்கு மேல் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லிக்கு வரவழைத்து சில உத்தரவுகளை போட்டு இருக்கிறார் சோனியா.

இது தான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களை கோபம் கொள்ள வைத்துள்ளது. காங்கிரஸ் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவை அடிமையாக நினைக்கிறது என்று கோபத்தில்
இருக்கிறார்கள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள்
பிஜேபி யோடு கூட்டணி வைத்து ஆட்சியில் இருந்து இருக்கிறோம். ஆனால் அவர்கள் காங்கிரஸ் மாதிரி இல்லாது எவ்வளவு டீச ண்டாக கூட்டணி யில் இருந்தார்கள் என்று பிஜேபி புகழ் பாட ஆரம்பித்து விட்டார்கள்
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்கள்.

இது மட்டுமல்லாது அமைச்சர் பதவி கிடைக்காத 7-8 காங்கிரஸ் எம்எல்ஏ க்கள் பாபுலால் மராண்டி மூலமாக புதிய ஆட்சி அமைய உதவினால் அமைச்சர் ஆகிவிடலாம் என்கிற கனவுடன் பிஜேபிக்கு நூல் விட்டு வருகிறார்கள்.
இதற்காகவே காத்து இருந்த பிஜேபி பாபுலால் மராண்டியையே பிஜேபியில் இணைய வைத்து முதல்வர் ஆக்குகிறோம் வாருங்கள்
என்று காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்திமோர்ச்சா எம்எல்ஏக்களுக்கு வலைவீசி காத்து இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் இது வரை இருந்த 20 ஆண்டு கால ஆட்சியில் பிஜேபி ஆட்சியும் ஜனாதிபதி ஆட்சியும் தான் அதிகளவில் இருந்துள்ளது. சோரன்கள் அதிகபட்ச மாக 1 வருடம்தான் முதல்வராக தாக்கு பிடித்து இருந்து இருக்கிறார்கள். எனவே விரைவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என எதிர் பார்க்கலாம். ( திரு. விஜயகுமார் )

©TNNEWE24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*