Connect with us

#24 Exclusive

ஜார்கண்ட் தேர்தல்: கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் முன்னிலை

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக கடந்த சில நாட்களாக தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஒரு கூட்டணியாகவும், பாஜக தனித்தும் போட்டியிட்ட நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன வாக்குகள் எண்ணப்படும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த முதல்கட்ட தேர்தல் முடிவின்படி 14 இடங்களில் காங்கிரஸ் கூட்டனீயும், பாஜக கூட்டணி 12 இடங்களிலும், ஜெவிஎம் மூன்று இடங்களிலும் மற்றவை மூன்று இடங்களிலும் முன்னணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

முதல்கட்ட தகவலே காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக இருப்பதால் அனைத்து கருத்து கணிப்புகளில் கூறியபடி காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே நேரத்தில் பாஜகவும் மிகவும் நெருங்கி உள்ளதால் நெருங்கி உள்ளதால் முடிவுகள் மாறவும் வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Loading...

இருப்பினும் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் கட்சி எது என்பது தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending