Connect with us

#24 Exclusive

ஜட்டியில் சரி இதிலுமா தங்கத்தை கடந்த முடியும் நூதன முறை சென்னையில் அதிர்ச்சி சம்பவம் !

சென்னை, திருச்சி சர்வதேச விமான நிலையங்களில் நாளுக்கு நாள் தங்கம் கடத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது முன்பெல்லாம் ஜட்டியில் மறைத்து வைத்து தங்கம் கடத்தினார்கள் ஆனால் இப்போது மலக்குடலில் தங்கத்தை கடத்தி வருகிறார்கள், ஆனால் இப்போது அதையும் தாண்டி சென்னையில் மலக்குடலில் ரப்பர் பேஸ்ட் ஒன்றிணை உருவாக்கி அதில் தங்கத்தை ஒட்டி நூதன முறையில் கடத்தி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் அண்ணா சர்வதேச முனையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக, திங்கட்கிழமையன்று 6 தங்க கடத்தல் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Loading...

திங்கட்கிழமையன்று காலை,துபாயிலிருந்து கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நஸீம் (49), என்பவரை விமான நிலைய வெளியேறும் பகுதியில் சுங்கத்துறையினர் வழிமறித்தனர். அவரது உடமைகளை சோதனை செய்ததில், காலணியில் உள்ள துவாரத்தில், தங்கத்தாலான 48 வளையங்களைப் பொருத்தி, நூதன முறையில் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதேபோன்று பால்பாயிண்ட் பேனாக்களுக்குள் மறைத்து வைத்து 46 தங்கக் கம்பிகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.  கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 231 கிராம் ஆகும்.  இதன் மதிப்பு ரூ. 8.6 லட்சம்.

Loading...

     மற்ற ஐந்து சம்பவங்களில், கொழும்புவிலிருந்து இண்டிகோ விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (69), சதாம் உசைன் (32), சென்னையைச் சேர்ந்த வசந்த் (31), புதுக்கோட்டையைச் சேர்ந்த அஸ்ரஃப் அலி (23) மற்றும் ஜபருல்லா கான் (35) ஆகியோரும் விமான நிலைய வெளியேறும் பகுதியில் வழிமறிக்கப்பட்டனர்.  இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் மலக்குடலில் ரப்பர் பேஸ்ட் போன்று மறைத்துவைத்து தங்கம் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.  இதையடுத்து, இவர்களிடமிருந்து 1.36 கிலோ எடையுள்ள 50.4 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கம் கைப்பற்றப்பட்டது. 

மொத்தத்தில் 1.6 கிலோ எடையுள்ள ரூ. 59 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டு, தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தற்போது மலக்குடலில் ரப்பர் ஸ்டாம்ப் ஒட்டி கடத்தும் நூதன முறையை கண்டு விமான நிலைய ஊழியர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending