Connect with us

சர்ச்சைகள்

ஏன் பேட்டியை வெளியிடாமல் தடுத்தார்கள் ஜெகத்காஸ்பர் பற்றி கிஷோர் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் !

Published

on

கிறிஸ்தவ பாதிரியார் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியான ‘win tv’ க்கு பேட்டி கொடுத்திருந்தார் அதில் அவர் கூறிய கருத்துக்கள் பல சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன இந்த சூழலில் மதன் எடுத்த பேட்டியை ஒளிபரப்ப கூடாது என சிலர் தடுக்க பார்த்ததாகவும், கஸ்பர் குறித்த சில தகவல்களையும் குறிபிட்டுள்ளார் அது பின்வருமாறு :-

இன்று பாதிரி ஜெகத்கஸ்பரை மதன் எடுத்த பேட்டி மிக முக்கியமானது.இதை ஏன் ஒளிப்பரப்பவிடாமல் தடுக்கப் பாரத்திருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிகிறது.பகிரங்கமாக தான் எவ்வளவு மோசமான கருத்தியல் கொண்டவர் என்பதை கஸ்பர் வெளிப்படுத்தியுள்ளார்..

மதன் கேட்கிறார் Canon law சட்டத்தின் கீழே சர்ச்சுகள் பல விஷயங்களை செய்கிறதே என்கிற போது ஜெகத் கஸ்பர் அதை மடைமாற்றி,குற்றவியல் வழக்குகளில் நாம் அதை ஏற்க வேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லையே என்கிறார்.இது எவ்வளவு அயோக்கியத்தனமான வாதம்?
2015 ஆம் ஆண்டு இஸ்லாமியருக்கு தனிச்சட்டம் சிவில் வழக்குகளில் விவாகரத்து விஷயத்தில் இருப்பது போல கிருஸ்த்தவர்களின் மதசட்டத்தை ஏற்க வேண்டும் என்று பாதிரிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

Loading...

இந்த கேனான் சட்டத்தின் தாக்கம் கொண்டதுதான் கிருஸ்த்தவ நாட்டில் பின்பற்றப்படும் ரோமன் மற்றும் சிவில் சட்டம்.நாளை இந்தியா செக்குலர் போர்வையின் வழியே,அவர்கள் சபதம் செய்தது போலே கிருஸ்த்தவர்கள் எண்ணிக்கை பெருகினால் அது இங்கேயும் நடக்கும்..
பாதிரிகள் மேல் சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை அது வெறும் குற்றச்சாட்டு என்கிறார்.நீதிமன்றத்தில் நிரூபித்தால் தண்டிக்கலாம் என்கிறார்.அதோடு கருத்தொருமித்து இருவர் பயணித்து எப்போது முரண்படுகிறார்கள்,என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும் என நுணுக்கமாக ஒன்றை திணிக்கிறார்.அதாவது பாதிரியார்கள் மீது குற்றம் சாட்டுவர்கள் கருத்து முரண்பட்ட பிறகு கற்பழிப்பு குற்றம் சொல்ல வாய்ப்புள்ளதாக சொல்கிறார்..

Loading...

குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டை மதம் பார்க்காமல் குழந்தைகளுக்கு எதிரானதாக பார்க்க வேண்டும் என்று உத்தம வாதத்தை வைக்கிறார்.இதையே எங்காவது ஒரு இந்து செய்தால் இவர் என்ன சொல்கிறார்?
ஜெகத் கஸ்பர் வாதத்தை பார்த்த போது ஒன்று தெளிவாக தெரிகிறது.நான் யாரென்றால் என் மதத்திற்கு ஆதரவாகவும்,இந்து மதத்தை வீழ்த்துவதற்கும் எல்லா முயற்சியும் காலம் காலமாக செய்து வரும் ஆபிரஹாமிய பணியாளின் எச்சம்.அதற்கு என் எல்லா யுத்தியையும் தமிழ்,திராவிடம் என்ற போர்வையில் புகுந்து கொண்டு செய்வேன்.அதை முடிந்தால் எதிர்கொள்ளுங்கள் என்கிறார்.எப்பேற்பட்ட யுத்தம் நடக்கிறது பாருங்கள்.

அடுத்தது,2006 லேயே ஈழம் அழியும் என்பதை நான் யூகித்தேன்..அதற்கான காரணிகளை கண்டறிந்து அரசியல் நிலைகளை கணித்தோம் என்கிறார். இந்த இடம்தான் அச்சமூட்டுகிற பகுதி.ஈழம் அழியும் என்பதை மிஷனரி அரசியல் மிகத்தெளிவாக வடிவமைத்துவிட்டன.அந்த அழிவை வைத்து இலங்கையை அது கபளீகரம் செய்து,தமிழர்களை இனவியல் அரசியல் வழியே ஆன்ம அறுவடை செய்ய மிகப்பெரிய திட்டம் வகுத்திருக்கின்றன.
தமிழகத்திற்குள்ளும் சேர்த்தேதான் என்று தெரிகிறது.அதுதான் அவருடைய வார்த்தைக்கான மறைபொருள்.

இன்று வரை மோடி மீது மிஷனரி அரசியலுக்கு எழும் மூர்க்கமான கோபம் என்னவென்றால்? அரைகுறையாக இழுத்துக் கொண்டிருந்தவனிடம் கூட இந்து மத உணர்வை தூண்டிவிட்டுவிட்டாரே என்பதுதான். எனக்கு எல்லா தமிழ் தேசிய அரசியல்வாதிகளும் நண்பர்கள் என்கிறார் கஸ்பர்.நீங்கள் கவனித்துப் பார்த்தால் ஒன்று புரியும்..ஜல்லிகட்டு போராட்டத்தின் போது போலீஸ் சுற்றி வளைத்து கலவரக்காரர்களை விரட்டிய போது,திருமுருகன் காந்தி சொன்னது முள்ளிவாய்க்கால் போல நடக்கிறது என்று.இங்கிருக்கும் தமிழ் தேசிய வாதிகள் பெரும்பான்மையானோர் ஈழம் போல அழிவு தமிழகத்துக்கு வரும் என்றே பேசுவார்கள்..அதற்கு காரணம் அது மிஷனரி கருத்தியல்.

கருத்தியல் பயங்கரவாதிளுடனான யுத்தம் முடிகிற தருவாயில் அவர்களுக்கு பின்னால் இருக்கும்,அவர்களை முகமூடியாக பயன்படுத்தும் உண்மையான பயங்கரவாதிகள் வெளியே வருவார்கள்..அதையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இவ்வாறு கிஷோர் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார், தொடர்ந்து பாதிரியார்கள் மீதான பாலியல் குற்றசாட்டு முன்னிலை பெரும்போதெல்லாம் அதனை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த போதகர்கள் தட்டி கேட்காமல் மூடி மறைப்பதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

சமீபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பலர் வாய் திறக்காமல் மவுனியாக இருப்பதாகவும் குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன, இதுதான் பாதிரியார் கஸ்பரின் உண்மை முகமோ?

©TNNEWS24

Loading...

Trending