Connect with us

#24 Exclusive

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் கிண்டலுக்கு உள்ளான ஜெயலலிதாவின் போஸ்டர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ‘தலைவி’ படத்தின் புதிய போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது இந்த போஸ்டர் ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில் இந்த போஸ்டரையும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்

ஏற்கனவே இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியான போது ஜெயலலிதாவுக்கும் கங்கனா ரனாவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்ததாக நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இன்று வெளியாகியுள்ள போஸ்டரும் ஜெயலலிதா போல் இல்லை என்பதுதான் அவரது ரசிகர்களின் குறையாக உள்ளது. படக்குழுவினர் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது

ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆரே உயிரோடு மீண்டு வந்து நடித்தது போல் அவரது கேரக்டர் இருந்ததாகவும் அந்த அளவுக்கு அரவிந்த்சாமிக்கு எம்ஜிஆர் கேரக்டர் கன கச்சிதமாக பொருந்தி இருந்ததையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் பொருந்தாமல் இருப்பது இந்த படத்தின் மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending