இனி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்து ஒருவரே முதல்வராக வரமுடியும் ! அதிரடி மாற்றம் !!

சுதந்திர இந்தியா வரலாற்றில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா அதிரடி சட்ட மசோதா ஒன்றிணை நாடாளுமன்றத்தில் அறிவித்தார், அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 பிரிவு ரத்து செய்யப்பட உள்ளதாகவும், மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாவும் பிரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Loading...

இதனையடுத்து அந்த மசோதா முதலில் மாநிலங்களவையில் நிறைவேறியது அதனை தொடர்ந்து மக்களவையில் நிறைவேறி சட்டமாக மாறியது, இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்றும் லடாக் ஆகியவற்றை பிரிக்கும் பொறுப்பில் மத்திய அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் அதன் வரையறை முடிந்துவிட்டதாகவும் வருகிற சுதந்திர தினவிழா அன்று பிரதமர் பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளின் எல்லையை முழுவதுமாக அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது, இந்த நிலையில் சட்ட மன்ற தொகுதிகள் மற்றும் நாடாளுமன்ற தொகுதிகள் வரையறுக்கப்பட்டு விட்டனவாம் இவற்றில் பெரும்பான்மை தொகுதிகள் இந்துக்கள் மற்றும் பார்சிகள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளதாம்.

Loading...

அத்துடன் தற்போது அங்கு இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து குடியேறி வருவதால் 2030 ம் ஆண்டிற்குள் இந்துக்களின் எண்ணிக்கை உயர்ந்துவிடும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது, பலகாலமாக வாக்களிக்கும் உரிமை இன்றி காஷ்மீரில் வசித்து வந்த வால்மீகி இனத்தவர்களுக்கு (தலித் ) காஷ்மீரில் வாக்குரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் இனி ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் மட்டுமே முதலமைச்சராக வருவதற்கு 98% வாய்ப்புகள் இருக்கிறதாம் அத்துடன் இதனையறிந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை எந்த தேர்தலிலும் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார், 90 % காஷ்மீர் இஸ்லாமிய இயக்கங்கள் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஆண்டுகள் மன்னர் ஆட்சி போல் காஷ்மீர் மாநிலத்தை ஆண்டு வந்த உமர் அப்துல்லா குடும்பதிற்கும் ,மெகபூவா முப்தி குடும்பதிற்கும் 370 சட்டத்தை நீக்கியதன் மூலம் முடிவுரை எழுதப்பட்டு விட்டன. வருகிற ஆகஸ்ட் 5 – ம் தேதி இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவோடு சேர்த்து, காஷ்மீர் மாநிலம் முழுமையாக இந்தியாவுடன் இணைந்ததை கொண்ட பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3945 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*