40 சதவீதம் செயற்கை சுவாசம்… அன்பழகன் உடல்நிலை பற்றி நேர்மறைத் தகவல்!

40 சதவீதம் செயற்கை சுவாசம்… அன்பழகன் உடல்நிலை பற்றி நேர்மறைத் தகவல்!

Loading...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் உடல்நிலை இப்போது நல்ல நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும்  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான கெ.அன்பழகன். இவரது வீட்டில் அவர் தம்பி மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டனர். இந்நிலையில் மக்கள் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Loading...

அங்கு அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளதை அடுத்து வெண்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் அவருக்கு உதவிகள் தேவைப்படின் அதை அரசு செய்யும் எனக் கூறியுள்ளார். மேலும் அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார். மேலும் அவரது சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மருத்துவமனையின் முதல்நாளில் அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக சொல்லப்பட்டது.வெண்ட்டிலேட்டர் மூலமாக 80 சதவீதம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு நாளாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனால் நேற்றில் இருந்து அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படிப்படியாக செயற்கை சுவாசம் குறைக்கப்பட்டு இப்போது 40 சதவீதம் மட்டுமே வெண்ட்டிலேட்டர் மூலமாக அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் அவருக்கு அளிக்கப்படும் மயக்க மருந்துகளின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*