Connect with us

#24 Exclusive

இவன் ஒரு வக்கிரம் பிடித்த கிறுக்கு பய கடுமையாக சாடிய பானுகோம்ஸ் ! என்ன காரணம்?

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த திஷா ( பெயர் மாற்றம் ) கடந்த வாரம் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கடுமையான முறையில் எரித்து கொல்லப்பட்டார் இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டோர் போன்ற கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர்.

அதுபோல் ஒரு கருத்தைதான் இயக்குனர் டேனியல் என்பவர் வெளிப்படுத்த அது இன்னும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாண்டி அனைவர் மனதிலும் கொந்தளிப்பை உண்டாக்கியது இதற்கு சமூக செயற்பாட்டாளர் பானுகோம்ஸ் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். பின்வருமாறு :-

பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு கொடூரங்கள், கூட்டு பாலியல் வன்புணர்வு சிதைப்புகள், கொலைகள் என்று வக்கிர சூழல் இருக்கும் நிலையில்..Daniel Shravan என்கிற சினிமா இயக்குனர்..பெண்கள் .. தங்கள் மீதான பாலியல் வன்புணர்வை ஏற்றுக் கொண்டால்..கொலை செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கலாம்..என்றும்..இன்னும் ஏதேதோ கற்பனைக்கும் எட்டாத ஆலோசனைகளை கூறி ட்வீட் செய்திருக்கிறார்.

Loading...

[ இத்தகைய கருத்து புதிது அல்ல. இந்திய பிரிவினையின் போது ..இந்திய பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர பாலியல் வன்புணர்வுகளை..அப் பெண்கள் சகித்துக் கொள்ளவேண்டும் என்று அப்போதிருந்த சுய பிம்ப மகான்கள் பேசியதுண்டு !] இதற்கு .. எதிர்ப்பு வலுவாக எழுந்தவுடன் ..அதை நீக்கிவிட்டு..என்னுடைய படத்தில் வில்லன் பேசும் வசனம் இது என்று ..தான் பற்ற வைத்த தீயில் மேலும் எண்ணையை ஊற்றி இருக்கிறார்.

Loading...

இதுபோன்ற வக்கிரம் பிடித்த கிறுக்குப்பயல்கள் எல்லாம் வில்லன்களை ஹீரோவாகக் காட்டி படம் எடுப்பதால் தான்.. சகிக்க முடியாத குப்பைகள் எல்லாம் படங்களாக வெளிவருகின்றன. இவ்வாறு கடுமையாக சாடியிருக்கிறார் பானுகோம்ஸ்.

©TNNEWS24

Loading...

Trending