முதல்வர் தொகுதியில் ஆபாச குத்தாட்டம்: நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

முதல்வர் தொகுதியில் ஆபாச குத்தாட்டம்: நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

கோவில் திருவிழா என்றாலே பொதுமக்கள் பயபக்தியுடன் சாமி கும்பிடுவார்கள் என்ற நிலை மாறி தற்போது பாட்டுக்கச்சேரி, ஆட்டம், பாட்டம் மற்றும் ஆபாச குத்தாட்ட கலாச்சாரம் என சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இதுபோன்ற ஒரு ஆபாச குத்தாட்டம் தமிழக முதல்வரின் தொகுதியிலேயே சமீபத்தில் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் எடப்பாடி தொகுதி, கோவில் திருவிழா ஒன்றில் விடிய விடிய குத்தாட்ட நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதாகவும், ஆபாச நடனங்களுடன் கூடிய இந்த குத்தாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது

Loading...

இந்த கோரிக்கையை ஏற்று காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து முதல்வர் தொகுதியின் மரியாதையை காப்பாற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Loading...
Loading...

TNNEWS24 TEAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *