Connect with us

#24 Exclusive

அரசியல் இருக்கிறது?.. வருமான வரி சோதனை குறித்து பானு கோம்ஸ் கருத்து !

நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திவரும் சூழலில், அங்கு நடைபெறும் நிகழ்வுகள் உடனுக்குடன் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் உள்ளன, மேலும் வருமானவரித்துறையின் நடவடிக்கை குறித்து ஆதரவு எதிர்ப்பு என இரண்டு பக்கங்களிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான பானு கோம்ஸ் வருமானவரித்துறை சோதனை குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் பின்வருமாறு :-

வருமானவரித்துறை சோதனையும், அமலாக்க துறை சோதனையும், அது தொடர்பான விசாரணைகளும் …நாடு முழுவதும் பரவலாக தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தமிழகத்திலும் எங்காவது சோதனைகளும், விசாரணைகளும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

Loading...

Demonetization
ஆதார்-பான் கார்டு-வங்கி கணக்கு இணைப்பு
டிஜிட்டல் பரிவர்த்தனை
ஜிஎஸ்டி
ரியல் எஸ்டேட் சீர்திருத்தம்
தங்க-வைர இறக்குமதி சீர்திருத்தம்
NGO சீர்திருத்தம் & கண்காணிப்பு
பினாமி சட்ட சீர்திருத்தம்,
வங்கி சீர்திருத்தம், etc…
போன்ற பல்வேறு சீர்திருத்தங்கள் ..

Loading...

முறைகேடான பணபரிவர்த்தனைகள், பதுக்கல்கள் ஆகியவற்றை கூடுதலாக வெளிச்சமிடுகின்றன. கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
இத்தகைய சோதனைகள்….அரசியல்வாதி, நடிகர்கள் என்றால் மட்டுமே கவனம் பெறுகின்றன.

இவையெல்லாம் சரி தான் . அரசியல் உண்டா இல்லையா ? என்றால்….அரசியலும் உண்டு .
ஆனால்… முறைகேடுகள் இல்லையெனில்..அரசியலும் கூட நுழைய இயலாது என்பதே அடிப்படை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

©TNNEWS24

Loading...

Trending