Connect with us

#24 Exclusive

அமைச்சரவையில் இருந்து வெளியேறியது சிவசேனா O.P.ரவீந்தர்நாத்திற்கு அடித்தது அதிர்ஷ்டம் !

Published

on

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா எம் பி அரவிந்த் டாவூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார், அதனை தொடர்ந்து தற்போது அதிகாரபூர்வமாக பாஜக சிவசேனா கூட்டணி முடிவிற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் யார் முதல்வராக தொடர்வது என்பதில் பா.ஜ. க, சிவசேனா இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் புதிய அரசு ஆட்சி பொறுப்பேற்பதில் இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க., வை ஆட்சி அமைக்க மகாராஷ்டிர கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாததால் தாங்கள் ஆட்சி அமைக்க முடியாது என கூறி விட்டது. இதனையடுத்து 2வது இடத்தில் உள்ள சிவசேனாவிற்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்திருந்தார்.,

தேசியவாத காங்., உடன் கூட்டணி வைக்க சிவசேனா முயற்சித்தது. தேசியவாத காங் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் கூட்டணி அமைக்க திட்டம் வகுத்தது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளதாகவும், சிவசேனா ஆட்சி அமைக்க தாங்கள் ஆதரவு அளிக்க போவதில்லை எனவும் அறிவித்தது. ஆனால் சிவசேனா மத்திய அமைச்சரவையில் இருந்தும் பா.ஜ.க கூட்டணியில் இருந்தும் விலகினால் மட்டுமே தாங்கள் ஆதரவு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும்., தெரிவித்தது

அதனை ஏற்று மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிவசேனா எம்.பி., அரவிந்த் சாவத், தனது மத்திய அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக தற்போது அறிவித்துள்ளார். இவர் மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில் மஹாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாதகாங்கிரஸ் – காங்கிரஸ் மூன்றும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தாலும் 3 மாதங்களுக்கு மேல் ஆட்சி நீடிக்காது என்றும் எனவே முரண்பாடான கூட்டணி அரசு அமைந்தால் அது சிவசேனாவிற்கு எதிராக முடியும் என்று கணக்கிட்டு பாஜக அமைதியாகிவிட்டதாம்.

மேலும் குளிர்கால கூட்ட தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்க மோடி முடிவு செய்துள்ளதாகவும் அதில் முன்பு விடுபட்ட அதிமுக மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத் இடம்பெறுவது தற்போது உறுதியாகிவிட்டது என்றும் சிவசேனாவிற்கு கொடுத்த இலாக்காவினை அதிமுகவிற்கு ஒதுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

©TNNEWS24

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share