சாவிற்கு காரணம் இவர்கள்தான். வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய பெண் !

சாவிற்கு காரணம் இவர்கள்தான். வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய பெண் !

Loading...

சமூகவலைத்தளம்.,

சமூக வலைதளத்தில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கின்றன, சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதன் மூலம், பலருக்கு நன்மையும், தீமையும் ஏற்படுவது அனைவரும் அறிந்த ஒன்றே இந்த சூழலில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் அரைகுறை ஆடைகள் இன்றி பர்தா அணிந்து சில டிக் டோக் விடீயோக்களை செய்து வந்தார்.

Loading...

அவருக்கு சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒன்று சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர், அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாததுடன் இது தனது உரிமை என்றும், முஸ்லீம் என்பதால் அல்லா எந்த இடத்திலும் பெண்களை தண்டிக்க சொல்லவில்லை என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த சூழலில் அந்த பெண்ணின் அனைத்து முகவரிகளையும் ஆராய்ந்து, அந்த பெண்ணின் பெயர் கணவர் பெயர் முதலியவற்றை அறிந்து அவரது விலாசத்திற்கே சென்று அந்த பெண்ணின் கணவரை சிலர் மிரட்டியதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து அந்த பெண்ணை (ஜைபுல்னிஸா ) அவரது கணவர் விவாகரத்து (தலாக் ) செய்வதாக அறிவித்துவிட்டாராம்.

இந்த சூழலில் வாழ்கையை இழந்த பெண் கடும் வேதனை தெரிவித்துள்ளார், முஸ்லீம் ஆண்களின் இந்த செயல் கண்மூடித்தனமானது, தனது வாழ்க்கையே போச்சு என்று நொந்து அழுதுள்ளார் ஜைபுல்நிஷா. இதற்கு பல தரப்பிலும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா போன்ற இடது சாரிய சிந்தனை கொண்ட மனிதர்கள் கடுமையாக இதனை அயோக்கியதனம் என்றே கண்டித்துள்ளனர்.

ஆனால் பெண்ணியம், இலக்கியம் பேசும் எந்த சமூக செயற்பாட்டாளரும், பத்திரிகையாளர்களும் இதுகுறித்து வாய் திறக்காமல் இருப்பது இதுதான் இவர்களின் அரசியல் அறிவா இல்லை ! எனது சாவிற்கு இவர்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு இறந்தால் தான் விவாதிப்பார்களா என ஊடகத்துறையை சேர்ந்த முன்னனி பத்திரிகையாளர்களின் சமூக வலைத்தள பக்கத்திலேயே பலரும் பதிவு செய்து பெண்ணின் உயிரை காப்பற்ற கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முத்தலாக் மசோதா குறித்து ஆயிரம் விவாதம் நடத்திய ஊடகங்கள் இந்த பெண்ணிற்கு கிடைத்த அநீதியை நீக்கி மறுவாழ்வு பெற்று தருமா இல்லை பாஜகவினர் குற்றம் சுமத்திவருவதுபோல் கண்டும் காணாமல் இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2642 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*