Connect with us

முகப்பு

சரியான தூக்கம் இல்லை…அவதிப்படும் இஷாந்த் ஷர்மா – ஏன் தெரியுமா?

சரியான தூக்கம் இல்லை…அவதிப்படும் இஷாந்த் ஷர்மா – ஏன் தெரியுமா?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இஷாந்த் ஷர்மா கடந்த இரு தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப் பட்டு வருகிறார்.

இந்திய அணி நியுசிலாந்து மண்ணில் தற்போது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அதில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு பிரிவுகளிலும் சொதப்பி முதல் இன்னிங்ஸில் 183 ரன்கள் பின் தங்கியுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பூம்ரா கூட விக்கெட்களை எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.

Loading...

இந்நிலையில் சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆனால் அவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் கடந்த இரு தினங்களாக 4 மணிநேரம் மட்டுமே தூங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ’ விளையாட மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் எனது உடல்நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை. தலைசுற்றல், தலைவலி, சோர்வு ஆகியவற்றில் இருந்து மீண்டுவர வேண்டும்.

Loading...

அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதாலேயே பந்து வீசினேன். ’ எனக் கூறியுள்ளார். ஒரு வேளை அவர் உடல்நிலை சரியாகாமல் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை என்றால் அது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பாக முடியும் என சொல்லப்படுகிறது. 31 வயதாகும் இஷாந்த் இந்தியாவுக்கு 91 போட்டிகளில் விளையாடி 297 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending