புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மோடி- மம்தா பானர்ஜியின் செயலால் கோபத்தில் பாஜகவினர்!

புயல் பாதிப்பை பார்வையிட சென்ற மோடி- மம்தா பானர்ஜியின் செயலால் கோபத்தில் பாஜகவினர்!

Loading...

உம்பன் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தைப் பார்வையிட வந்த மோடியை மம்தா பானர்ஜி வரவேற்காமல் எதையோ படித்திக் கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்று. அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாக பல முறை விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் இன்று சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் ஒன்று, மம்தா பானர்ஜியின் அந்த மோடி மேல் உள்ள கோபத்தைக் காட்டும் விதமாக உள்ளது.

Loading...

வங்க கடலில் தோன்றிய உம்பன் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வரை சூரை,க்காற்று வீசியதால் மேற்கு வங்கத்தில் பெரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.  இந்த புயலால் தலைநகர் கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கு 72 பேர் பலியானதாகவும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில் மேற்கு வங்க அரசு தீவிரமாக கடந்த இரண்டு நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனாவால் இரண்டு மாதங்களில் ஆன சேதத்தை விட இது அதிகம் என சொல்லப் படுகிறது. இதற்காக மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து மேற்கு வங்கத்தில் புயல் சேதமான இடங்களை பார்வையிட்ட பிரதமர் மோடி, தனி விமானத்தில் வந்தார். அவரை வரவேற்க மாநில முதல்வர் என்ற முறையில் வந்த மம்தா பானர்ஜி மோடி விமானத்தில் இருந்து இறங்கும்  நேரத்தில் கையில் எதையோ வைத்துக்கொண்டு தீவிரமாக படித்துக் கொண்டு இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது வேண்டுமென்றே மோடியை அவமரியாதை செய்யும் விதமாக உள்ளதாக பாஜகவினர் மம்தா பானர்ஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*