Connect with us

#24 Exclusive

என்ன இப்படி செய்துவிட்டார் விஜய் சேதுபதி எதிர்த்தது அனைத்தும் வேசமா?

என்ன இப்படி செய்துவிட்டார் விஜய் சேதுபதி எதிர்த்தது அனைத்தும் வேசமா?

சமூகவலைத்தளம்.,

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் படியாக வளர்த்துவிட்டார் விஜய் சேதுபதி, அவரது இந்த வளர்ச்சிக்கு அவரது நடிப்பு மற்றும் அவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைக்கதைகள் காரணம் என்று சொல்லப்பட்டாலும், அவர் அவ்வப்போது தெரிவித்த அரசியல் கருத்துக்களும் அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தன, ஆனால் தற்போது அதையே காரணமாக காட்டி எல்லாம் வேஷம் சினிமாவில் பெயர் வாங்குவதற்கான செயல்தான் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Loading...

தற்போது விஜய் சேதுபதி விவசாயம் குறித்த தனியார் கார்ப்பரேட் விளம்பரத்தில் நடிக்கிறார், அதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர், ஏற்கனவே ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்ததில் இருந்து அனைவரும் அங்கே கர்ச்சிப் முதல் உணவு பொருள்கள் வரை வாங்கி விடுகிறார்கள், சில்லறை வணிகமே முடங்கும் அளவிற்கு சென்றுவிட்டது, ஆனால் பெரிய யோக்கியர் மாதிரி வெளியில் விவசாயத்திற்கு ஆதரவாகவும், மத்திய அரசை எதிர்த்தும் கருத்து பேசி கைதட்டல் வாங்கிய இவரே இன்று மற்றொரு கார்ப்பரேட் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

Loading...

இதில் இருந்தே இவர்களுக்கு தேவை பணமும், படமும் ஓடவேண்டியதுதான் தவிர மக்கள்மீது அக்கறையெல்லாம் இல்லை என்று இன்னும் கடுமையான வார்த்தைகளால் விமர்ச்சித்துள்ளார் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பாலமுருகன்.

இன்னும் ஒரு சிலரோ நம்ப வைத்து என்ன இப்படி செய்துவிட்டார் விஜய் சேதுபதி இதுதான் இவரது உண்மை முகமா? பணம்தான் இவர்களது தேவையா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ விஜய் சேதுபதி மறைமுகமாக பிரதமரை விவசாயிகளுடன் ஒப்பிட்டு காவேரி விவகாரங்களில் பேசி கைதட்டல் வாங்கினார், இப்போது அந்த யோசனை எங்கே சென்றது என்றும் எல்லாம் வேஷமா என்றும் விமர்ச்சித்து வருகின்றனர் பதில் சொல்வாரா சேதுபதி?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending