Connect with us

உடல்நலம்

இதுதான் இத்தாலியின் நிலைமை –வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் வீடியோ உண்மையா ?

இதுதான் இத்தாலியின் நிலைமை –வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் வீடியோ உண்மையா ?

சீனாவில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது மனிதர்கள் வாழும் 6 கண்டங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை 13000 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். கிட்டதட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலானவர்கள் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த நோய் தாக்குதல் கண்டறியப்பட்டு மூன்றாவது வாரம் ஆகியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் இருந்து பரவினாலும் இப்போது இத்தாலியே கொரோனா வைரஸுக்கு அதிக மனிதர்களைப் பலி கொடுத்த நாடாக உள்ளது. 130 கோடிக்கும் மேலாக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை விட 6 கோடி மக்கள் தொகை கொண்ட இத்தாலியில் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Loading...

இந்நிலையில் இதுதான் சாக்கு என்று நம் வாட்ஸ் ஆப் வதந்தி பரப்புவோர் ஒரு வீடியோ வைரலாக பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில்  விமான நிலையத்துக்கு அருகில் மக்கள் சிலர் மூச்சுவிட முடியாமக் கஷ்டப்பட்டுக் கொண்டும், அலறிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் ஓடுவது என அச்சமூட்டும் நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கினர். ஆனால் உண்மையில் அந்த வீடியோ மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள செனகல் என்ற நாட்டில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட வீடியோ செனகல் நாட்டின் விமான நிலையத்தில் அவசரநிலை பயிற்சிக்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

Loading...
Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending