Connect with us

#24 Exclusive

கமல் ரஜினி கூட்டணியால் என்ன நடக்கும்? நடுங்கும் திராவிட கட்சிகள்

திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்று இல்லையே என்று பொதுமக்கள் மட்டுமன்றி, பல சிறிய கட்சிகளும் புலம்பிக் கொண்டே வந்தன. பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமாக உள்பட சில அரசியல் கட்சிகள் அதிமுக-திமுக என மாறி மாறி கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.

இந்த இரண்டு கூட்டணிக்கு மாற்றாக ஒரு புதிய முயற்சியாக மக்கள் நல கூட்டணி அமைந்தது. ஆனால் அந்த கூட்டணி எடுபடாமல் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. அந்த கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை என்பது உறுதியாயிற்று

Loading...

இந்த நிலையில் ஆளுமையுள்ள தலைவர்களாக கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத நிலையில், தற்போது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு தரப்பும் பலவீனமாக இருக்கும் நிலையில், ரஜினி-கமல் என இரண்டு ஆளுமையுள்ள தலைவர்கள் புதிதாக தோன்றியுள்ள நிலையில், சின்ன அரசியல் கட்சிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது

Loading...

கமல் மற்றும் ரஜினி இணைந்தால் அதிமுக மற்றும் திமுகவை விட்டு விட்டு பல அரசியல் கட்சிகள் இந்த கூட்டணிக்கு வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இப்படி ஒரு மெகா கூட்டணி ஏற்பட்டால் அதிமுக மற்றும் திமுக தனித்து விடப்படும் என்றும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத இந்த இரண்டு கட்சிகள் மக்கள் மத்தியில் எடுபடாது என்றும் தமிழகத்தில் ரஜினி-கமல் தலைமையிலான மிகப்பெரிய கூட்டணி அரசு முதல் முறையாக ஆட்சி அமைக்கும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இது எந்த அளவுக்கு சாத்தியம் ஆகும் என்பதை 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலுக்கு பிறகுதான் தெரியவரும்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending