ஆம்னி பஸ் கட்டணங்கள் இரு மடங்கு உயர்வா? மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!

ஆம்னி பஸ் கட்டணங்கள் இரு மடங்கு உயர்வா? மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!

Loading...

ஊரடங்குக்குப் பின்னர் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயரும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனாவால் பல தொழில்களும் முடங்கி அரசுக்கான வரி மற்றும் வருவாய் குறைந்துள்ளது. இதனை சரிகட்ட அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனால் பல கட்டண உயர்வுகளை அறிவித்து வருகிறது. சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது மட்டும் டாஸ்மாக் மது வகைகளின்  விலையையும் ஏற்றியது.

Loading...

இந்நிலையில் ஊரடங்குக்குப் பின் போக்குவரத்து தொடங்கும் போது பேருந்துகளின் கட்டணமும் உயரலாம் என தெரிகிறது. ஊரடங்குக்குப் பின்னர் பாதி பயணிகளோடு பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ஊரடங்குக்கு பின்னர் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இருமடங்காக உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அப்சல் என்பவர் தெரிவித்துள்ளதாக் செய்திகள் பரவியது. ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு பிறகே ஆம்னி பேருந்து கட்டண உயர்வு பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் தற்போதைக்கு கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*