தமிழகத்தின் வூஹான் ஆகிறதா சென்னை? இன்று மட்டும் இத்தனை பேரா?

தமிழகத்தின் வூஹான் ஆகிறதா சென்னை? இன்று மட்டும் இத்தனை பேரா?

Loading...

தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தகவலை தினமும் சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி இன்று மட்டும் தமிழகத்தில் 743 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 13,000 ஐ தாண்டியுள்ளது.

Loading...

இந்நிலையில் சென்னையில் மட்டும் இன்றும் எண்ணிக்கை 500 ஐத் தாண்டியுள்ளது. கடந்த 10 நாட்களாக சென்னையில் அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் 8228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவின் வூஹான் மாகாணம் போல சென்னையும் மாறுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

சென்னையில் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக இருப்பதால் பரவலைத் தடுக்க முடியவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*