Connect with us

#24 Exclusive

சங்ககாராவின் மனைவியை பற்றி தவறாக பேசிய இர்பான் பதான் ! பின்னர் பதானிடம் சங்ககாரா மனைவி கூறியது !

இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடி பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர் இர்பான் பதான் இவர் இந்திய அணிக்கு ஒரு நல்ல ஆள் ரவுண்டராக விளக்கியுள்ளார் 2003 ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான பதான் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினர்

இந்த காலத்தில் 120 ஒருநாள் போட்டியிலும் 29 டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் பதான் . அதிலும் குறிப்பாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் இவரே ஆவார் .

முதல் வீரர் ஹர்பஜன் சிங் . இவர் நேற்று தனது ஓய்வை அறிவித்துள்ளார் . இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சல்மான் பட் , யூசப் , யூனிஸ் கான் ஆகிய 3 சிறந்த பட்ஸ்மான்களையும் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார் .

Loading...

ஓய்வை அறிவித்த பின் பேசிய இர்பான் பதான் இலங்கை வீரர் சங்ககாரா உடனான ஒரு மோதலை நினைவு கூர்ந்தார் அதில் டெல்லியில் நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின்போது துவக்க வீரர் ஷேவகுக்கு காயம் ஏற்பட்டதால் தான் துவக்க வீரராக களமிறங்கியதாகவும் அதில் தான் சிறப்பாக விளையாடி 93 ரன்கள் அடித்ததாகவும் கூறிய பதான் .

Loading...

அந்த போட்டியில் இந்திய வெற்றி பெரும் நிலையில் இருந்தபோது தன் அருகில் வந்த சங்ககாரா பதானின் பெற்றோரை பற்றி தவறாக பேசியதாகவும் . உடனே கோவமடைந்த பதான் சங்ககாராவின் மனைவியை பற்றி தவறாக மிகவும் இழிவாக பேசியதாகவும் கூறினார் .

அன்று முதல் தனக்கும் சங்ககாராவுக்கு இடையே ஒரு மனக்கசப்பு இருந்துவந்ததாகவும் . அதன் பின்னர் சில ஆண்டுகள் கழிந்து தானும் சங்ககாரவுன் கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிக்காக ஒன்றாக விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அப்போது அங்கு சங்ககாராவின் மனைவியும் வந்திருந்ததாகவுன் ,

பதானை பார்த்ததும் சங்ககாரா தன் மனைவியிடம் இவர் தான் உன்னை பற்றி அன்று அப்படி பேசியவர் என்று சொல்ல . உடனே சங்ககாராவின் மனைவியிடம் சென்று தான் மன்னிப்பு கேட்டதாகவும் . ஆனால் சங்ககாராவின் மனைவியோ அதை விடுங்கள் என் கணவர் என்னிடம் முழுவதையும் சொன்னார் அவர் உங்களது பெற்றோரை தவறாக பேசியதால் தான் நீங்கள் அப்படி செய்தீர்கள் என்று . பெற்றோரை தவறாக பேசினால் யாருக்கு தான் கோவம் வராது என்று சங்ககாராவின் மனைவி கூறியதாகவும் அன்று முதல் தானும் சங்ககாராவும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் இர்பான் பதான்

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending