வீரப்பன் புகழ் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு கொரோனாவா ? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

வீரப்பன் புகழ் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு கொரோனாவா ? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Loading...

வீரப்பனை சுட்டுக் கொன்ற போலிஸ் குழுவுக்கு தலைமை தாங்கிய விஜயகுமார் கோரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸால் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,00,000 ஐ தாண்டியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 69,000 ஐ தாண்டியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது.

Loading...

இந்தியாவில் கொரோனா பரவல் மூன்றாம் கட்டத்துக்கு செல்லக் கூடாது என்பதற்காக அரசு கடுமையாக உழைத்து வருகிறது. இதனால் கொரோனா அறிகுறிகளோ அல்லது கொரோனா நோயாளிகளோடு நேரடி தொடர்பில் இருந்தவர்களையோ தனிமைப்படுத்திக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற குழுவுக்குத் தாங்கி தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார். இவர் கொரோனா பாதித்த சி.ஆர்.பி.எப் மருத்துவர் ஒருவருடன் கடந்த 23ம் தேதி தொடர்பில் இருந்திருக்கிறார். இதனால் தனக்குக் கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*