Connect with us

#24 Exclusive

இந்த ஐபிஎல் பைனல் மும்பையில் இல்லை !எங்கு தெரியுமா ? உற்சாகத்தில் ரசிகர்கள் !

ஐபிஎல் 2020 மார்ச் மாத இறுதியில் துவங்கவுள்ளது அதற்கான ஏலம் சில நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் நடைபெற்றது . இந்நிலையில் வழக்கமாக ஐபிஎல் இறுதிப்போட்டி கடந்த முறை யார் வெற்றியாளரோ அவர்களின் மைதானத்தில் நடத்துவது வழக்கம்

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெறவேண்டிய இறுதிப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்க தடை இருப்பதால் ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது . ஆனால் இந்த முறை மும்பை சாம்பியன் என்பதால் மும்பை வன்கடேவில் தான் இறுதிப்போட்டி நடைபெறுவதாக இருந்தது ஆனால் இப்போது அது மாற்றியமைக்கப்பட்டுள்ளது .

2020 ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுவரும் புதிய மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது பிசிசிஐ . சர்தார் வல்லபாய் படேல் மைதானம் அல்லது மொடேரா மைதானம் என்று அழைக்கப்படும் அந்த மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவாகிவருகிறது .

Loading...

700 கோடி ரூபாய் செலவில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்டுவந்த மைதானம் இப்போது நிறைவு தருவயில் உள்ளது . இந்த மைதானத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து ஆட்டத்தை பார்க்கலாம் .

Loading...

ஐபிஎல் இறுதிப்போட்டியை அங்கு நடத்தில் அந்த ஆட்டத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்களை வரவழைத்து உலக சாதனை படைக்கும் நோக்கில் உள்ளது பிசிசிஐ அதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending