இந்திய வீரர்கள் மட்டும் இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடலாம் – ராஜஸ்தான் அணியின் புதிய யோசனை!

இந்திய வீரர்கள் மட்டும் இந்த ஆண்டு ஐபிஎல் விளையாடலாம் – ராஜஸ்தான் அணியின் புதிய யோசனை!

Loading...

ஐபிஎல் 2020 தொடர் நடப்பது சந்தேகத்துக்குள்ளாகியுள்ள நிலையில் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடத்த சில நாட்களாக இந்தியாவில் தனது கிளையை விரிவுபடுத்தியுள்ளது . இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 5000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது.

Loading...

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக கடந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னரும் தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்கும் விதமாக இந்திய பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதனால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15க்கும் பிறகு நடப்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்று விளையாடினால் சிறப்பாக இருக்கும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ‘இப்போது நிலவும் சூழ்நிலையில் இந்திய வீரர்கள் மட்டும் பங்கேற்று ஐபிஎல் போட்டிகள் நடந்தால் அது உண்மையான இந்தியன் பிரீமியர் லீக்காக இருக்கும். அதற்கு எங்கள் அணி ஆதரவு அளிக்கிறது. போட்டிகளே நடக்காமல் இருப்பதற்கு, இந்திய வீரர்களை மட்டும் கொண்டு நடத்துவது நல்லது. இதுகுறித்து ஏப்ரல் 15 ஆம் தேதிக்குப் பிறகு பிசிசிஐ முடிவெடுக்கலாம்.’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ஆதரவுகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*