Connect with us

#24 Exclusive

வாட்ஸாப்பில் சற்றுமுன் ஸ்டேட்டஸ் குறித்து அறிமுகமான புதிய வசதி ! சோதித்து பார்த்தீர்களா?

Published

on

வாட்ஸாப்பில் சற்றுமுன் ஸ்டேட்டஸ் குறித்து அறிமுகமான புதிய வசதி ! சோதித்து பார்த்தீர்களா?

சமூகவலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் வாட்சாப் செயலியில் வேண்டாம் என்று மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ்களை மறைக்கச் செய்யும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது . முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் சோதனை முறையில் வழங்குகிறது வாட்சாப் . வாட்ஸாப்பில் இருப்பவர்களின் ஸ்டேட்டஸ் மியூட் செய்யும் போது, தற்போது அவை சற்றே மறைக்கப்பட்ட நிலையில், கீழ்புறமாக தெரியும். தற்போது புதிய 2.19.260 பீட்டா பதிப்பில் மியூட் செய்யப்பட்டவற்றை முழுமையாக மறைக்கச் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதன்மூலம் ஒருவர் ஸ்டேட்டஸ் மியூட் செய்துவிட்டால் அவரது ஸ்டேட்டஸ் நமக்கு நீக்கப்பட்டுவிடும்.

இந்த புதிய அம்சம் ஹை மியூட்டெட் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் என்ற பெயரில் வாட்ஸாப் வழங்குகிறது, வாட்ஸ்அப் பீட்டா 2.19.260 பதிப்பை பயன்படுத்துவோர் புதிய அம்சத்தை பயன்படுத்த முடியும். ஒருவேளை செயலியை அப்டேட் செய்த பின்பும், இந்த அம்சம் கிடைக்காத பட்சத்தில் வாட்ஸ்அப் செயலியை நீக்கிவிட்டு மீண்டும் ரீ-இன்ஸ்டால் செய்து முயற்சித்து பார்க்கவும்.

மேலும் வாட்சாப் செயலி மூலம் பணம் அனுப்ப மற்றும் பெற பிரபல phonepe மற்றும் googlepay ஆகியவை போன்று UPI வசதியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இவை அனைத்தும் வாட்சாப் நிறுவனத்தை பேஸ்புக் நிர்வாகம் கைப்பற்றியதில் இருந்து பல புதிய அப்டேட்களை தந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share