இனி முத்தக்காட்சிகளை எப்படி எடுப்பது? சினிமா துறையினர் ஆலோசனை!

இனி முத்தக்காட்சிகளை எப்படி எடுப்பது? சினிமா துறையினர் ஆலோசனை!

Loading...

கொரோனாவுக்குப் பின் சினிமா படப்பிடிப்புகளில் நெருக்கமான காட்சிகளை எவ்வாறு படமாக்குவது என்ற குழப்பம் நிலவி வருகிறது.

கொரோனா உலகையே முடக்கிப் போட்டுள்ள நிலையில் உலகளவில் பில்லியன் டாலர்கள் சுழலும் துறையான சினிமாவையும் அது விட்டு வைக்கவில்லை. கொரோனா அச்சம் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் மற்றும் வெளியீடுகள் கால வரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல கோடி ரூபாய் பணம் முடங்கியுள்ளது.

Loading...

இந்நிலையில் கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கினாலும் அதன் பின் எப்படி நெருக்கமான காட்சிகளைப் படமாக்குவது என்பது குறித்து இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த திரைப்படப் பிரிவுகளின் பிரதிநிதிகள் ஜூம் மூலம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினர்.

அப்போது படப்பிடிப்பில் நெருக்கமானக் காட்சிகளை படம்பிடிப்பதற்கான விதிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரே விடை சினிமாவின் வி எஃப் எக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுதான் என சொல்லப்படுகிறது. பிளாக்கிங் என்ற தொழில்நுட்ப முறையின் மூலமாக அதுபோன்ற காட்சிகளை படமாக்க உத்தேசித்துள்ளதாக சரிகமா நிறுவனத்தின் இந்தியாவின் துணைத் தலைவர் சித்தார்த் ஆனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*