Connect with us

Uncategorized

பா.சிதம்பரம் சிக்கியது எப்படி…இந்திராணி முகர்ஜி பரபரப்பு வாக்குமூலம்.

தொழிலதிபர்களான பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் ஐ.என்.எக்ஸ் குழுமத்தின் உரிமையாளராக இருந்தவர்கள். இவர்களின் மகள் ஷீனா போராவை கொலை செய்த குற்றத்திற்காக, இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் சிறையில் இருக்கிறார்கள். இந்த ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் இவர்கள் அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலம் தான், இப்போது பா.சிதம்பரம் சிக்கிக்கொண்டு சி.பி.ஐ விசாரணையில் இருக்க காரணம்.

இந்திராணி முகர்ஜி அமலாக்கத்துறைக்கு அளித்த வாக்குமூலமானது, கடந்த 2018 ஆம் ஆண்டில் எங்கள் நிறுவனத்திற்கு அந்நிய முதலீடு வாரியத்தின் ஒப்புதல் பெருவதில் சிக்கல் ஏற்பட்டதை உணர்ந்தோம், இந்த சிக்கலை தீர்க்க பா.சிதம்பரத்திடம் உதவி கேட்கலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். அதன்படியே இருவரும் பா.சிதம்பரத்தை சந்தித்து பேசினோம். நாங்கள் கொண்டுவந்த விண்ணப்ப நகலையும் கொடுத்தோம். அதிலுள்ள சிக்கலை புரிந்துகொண்ட பா.சிதம்பரம், இதற்கு நான் உதவுகிறேன், அதற்கு பதிலாக எனது மகன் கார்த்திக்கின் வர்த்தகத்திற்கு பணம் கொடுத்து உதவுமாறு பா.சிதம்பரம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

அதன்படி டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில், கார்த்திக் சிதம்பரத்தை நாங்கள் சந்தித்தோம். அவருக்கு ஏற்கனவே இந்த விஷயம் தெரிந்திருந்தது. இந்த அனுமதி உங்களுக்கு வாங்கி தருகிறோம், அதற்கு பதிலாக 10 லட்சம் அமெரிக்க டாலர் தரமுடியுமா என்று கார்த்திக் சிதம்பரம் கேட்டார். அதற்கு அவ்வளவு பணம் சாத்தியமில்லை என கூறிவிட்டோம். உடனே என்னுடைய நண்பர்களின் நிறுவனங்கள் என்று 3 நிறுவனங்களின் பெயரை கூறினார். அந்த நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கார்த்திக் கூறினார். மேலும் நீங்கள் அவர்களிடம் ஐ.என்.எக்ஸ் மீடியாவை சேர்ந்தவர்கள் என்று அவர்களிடம் காட்டிக்கொள்ளவேண்டாம் என்று கார்த்திக் கேட்டுக்கொண்டார். பண விவகாரங்களை எனது கணவர் தான் பார்த்துக்கொண்டார் அதனால் எவ்வளவு பணம் பரிமாறியது என்ற விவரம் எனக்கு தெரியாது என்று இந்திராணி கூறினார்.

Loading...

அமலாக்கத்துறையிடம் பீட்டர் முகர்ஜி கூறியதாவது. பா.சிதம்பரத்தை நான் 3 முறைக்கு மேல் சந்தித்தேன், எங்கள் விண்ணப்பத்தை கிடப்பில் போட்டுவிடக்கூடாது என்பதற்காக அடிக்கடி சந்தித்தேன். அப்போது எனது மகன் கார்த்திக்கின் வர்த்தக நலனை கருத்தின் கொண்டு வெளிநாட்டில் இருக்கும் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். கார்த்திக் சிதம்பரத்திடம் பேசுகையில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை கொடுக்குமாறு கேட்டார், ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க இயலாது என்று கூறிவிட்டேன். ஆனால் அதற்கு முதல் பணமாக ரூபாய் 10 லட்சத்தை செலுத்திவிட்டென் என்று பீட்டர் முகர்ஜி வாக்குமூலம் அளித்தார்.

Loading...

பொதுவாக ஊழல் வழக்கில் கைதான தலைவர்கள் ஏராளமானோர், தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, லல்லுபிரசாத் யாதவ், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர், அந்த வரிசையில் தற்போது பா.சிதம்பரமும் இணைந்துள்ளார்.

Loading...

Trending