பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் சென்று பூஜை போட்டாச்சு ! அடுத்தது அமிட்ஷா சொன்னதுதானா?

POK :-

Loading...

சரியாக 72 -ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நீலம் நதிக்கரையில் உள்ள “சாரதா பீடத்தில்”பூஜைகள் நடைபெற்றுள்ளது.இதை பார்க்கும்பொழுது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவோடு இணைக்க நடைபெற்ற பூஜையாகவே தெரிகிறது.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு
நடைபெற்ற முதல் காஷ்மீர் போரில் இந்தியா
இழந்தது காஷ்மீரின் ஒரு பகுதியை மட்டுமல்ல.இந்திய பண்பாட்டின் அடையாளமாகவும் இந்திய ஞானத்தின் உறைவிடமாகவும் இருந்த சாரதா பீடத்தையும் இழந்து விட்டது.

Loading...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் நதிக்கரையில் 51 சக்திபீடங்களில் அன்னையின் வலது கைவிழுந்த இடமாக கருதப்பட்ட இடத்தில் உள்ளது தான் சாரதா பீடம். இங்கு 5000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில் உண்டு.சுமார் 142 அடி உயரத்தில் 96 அடி அகலத்தில் ஒரு கோயில் இருந்தது. அசோகர் தன்னுடைய வாழ்நாளின் இறுதி காலத்தில் அதாவது கிமு 237 ம் ஆண்டுகளில் இந்த கோயிலை புனரமைத்தார் என்று கூறுகிறார்கள்.இங்கு சாரதா பல்கலைகழகம் என்கிற பெயரில் ஒரு யுனிவர்சிட்டியும் இருந்துள்ளது.

https://youtu.be/Rw4KOxpnrD0
Video

இந்த சாரதா பல்கலை கழகத்தில் சுமார் 5000 மாணவர்களுக்கு வேத பாடங்கள் கற்று கொடுத்து வந்துள்ளார்கள் என்கிறது வரலாறு .இங்கு மிகப்பெரிய அளவில் ஒரு நூலகம் இருந்துள்ளது. ராமானுஜர் ஆதிசங்கரர் இங்குவந்து தங்கி பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதியுள்ளதாக சாரதா பீட குறிப்புகள் கூறுகின்றன.

கிபி 632- ல் சீனப் பயணியான “யுவான்சுவாங்” இங்கு 2 ஆண்டுகள் தங்கி இருந்து பௌத்த மதம் பற்றிய கல்வியை கற்று சென்றுள்ளார். கிபி 14 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்குள்ள கோயில் சாரதா பல்கலைக்கழகம் ஆகியவற்றை முகலாய மன்னர்கள் இடித்து தள்ளி விட்டார்கள்.

இருந்தாலும் இடிந்த பகுதியில் பூஜைகள் நடை பெற்று வந்தன. ஆனால் 1947 -க்கு சாரதா பீடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்து விட்டதால் அங்கு பூஜைகள் நின்று விட்டன. ஆனால் 72 ஆண்டுகளுக்கு பிறகு சாரதா பீடம் இருந்த பகுதியில் நேற்று “சரஸ்வதி பூஜையை” முன்னிட்டு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

காஷ்மீர் மக்கள் அன்னை சாரதாவை சரஸ்வதி என்கிற பெயருடனே வணங்கி வந்தனர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அன்னை சாரதாவின் பீடத்தில் நடைபெற்ற இந்த வழிபாடு நிச்சயமாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு தெரிந்தே நடைபெற்று இருக்கும்.

ஏற்கனவே இந்தியாவின் அடுத்த டார்கெட் காஷ்மீர் தான் என்று பலரும் கூறி வரும் நிலையில் இப்பொழுது அங்குள்ள. சாரதாபீடத்தில் ஆயுத பூஜை நடைபெற்றுள்ளதால் அது உண்மையாகி விடும் போலவே தோன்றுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் நிச்சயம் மீட்போம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா தெரிவித்த நிலையில் அது எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இந்தியர்கள் இடையே அதிகரித்துள்ளது.

பூஜை போட்டாச்சு இனி அடுத்து என்ன?

திரு – விஜயகுமார்

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*