Connect with us

#24 Exclusive

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி . சங்கர் உட்பட பலர் காயம் . தொடர்ந்து பதிவிடும் கமல் என்ன சொன்னார் தெரியுமா?

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது . வழக்கம் போல நாளைய படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் செட் அமைக்கும் பணி நடைபெற்றுவந்த நிலையில் .

உயரமான செட் என்பதால் கிரேன் மூலம் பணிகள் நடைபெற்றது அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மேலும் 10 பேர் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இந்த விபத்தில் இயக்குனர் சங்கருக்கும் லேசான காயம் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

நீண்ட இழுபறிக்கு பின் பெரிய எதிர்பார்ப்புடன் துவங்கப்பட்ட இந்தியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவந்த சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது . வழக்கமாக படப்பிடிப்பில் விபத்துகள் நடப்பது இயல்புதான் என்றாலும் அவை அனைத்தும் சிறிய விபத்துகள் ஆனால் 3 உயிரிகள் பலியாகும் அளவிற்கு நடந்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .

Loading...

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல் ஹாசன் எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட
அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் .

Loading...

சற்று நேரத்திற்கு முன்னர் மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்தபின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கமல்ஹாசன் மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர்களை பார்த்து மருத்துவர்களிடம் பேசியுள்ளேன்.

முதலுதவி வழங்கப்பட்டு உரிய சிகிச்சைக்கான வேலைகள் நடக்கிறது.

இவர்கள் விரைவாக உடல் நலம் பெற்றிடுவார்கள் என்ற நம்பிக்கையுடனே இந்த இரவு விடியட்டும். என்று குறிப்பிட்டுள்ளார் .

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending