12 சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கும் குறும்படம் – இணையத்தில் வைரல் #Family

12 சூப்பர் ஸ்டார்கள் நடித்திருக்கும் குறும்படம் – இணையத்தில் வைரல் #Family

Loading...

இந்தியாவின் பல்வேறு மொழி சினிமாக்களை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடித்துள்ள பேமிலி என்ற குறும்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சினிமா துறை முடங்கியுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் சினிமாவில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக சினிமா தொழிலாளர்களுக்கு நிதி திரட்டும் விதமாக பேமிலி எனும் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Loading...

இந்த குறும்படத்தில் இந்திய சினிமாவின் பல்வேறு மொழி திரையுலகைச் சேர்ந்த உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், சோனாலி குல்கர்னி, புரொசஞ்சித் சட்டர்ஜி, ஷிவ ராஜ்குமார் மற்றும் தில்ஜித் தோசஞ்ச் இணைந்து ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த குறும்படத்தில் குடும்பத்தின் மூத்தவரான அமிதாப் பச்சன், தன் கண்ணாடியைத் தொலைத்து விட அதை வீட்டில் உள்ள மற்றவர்களைத் தேடித் தருமாறு கேட்கிறார். அதையடுத்து வீட்டின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்த கண்ணாடியைத் தேடிக் கண்டுபிடிப்பதே கதை. ஒரே வீட்டில் அனைத்து நடிகர்களும் இருக்கும்படி காட்சிகள் எடுக்கப்பட்டது போல இருந்தாலும் அனைத்துக் காட்சிகளும் தனித்தனியாக அவரவர் வீட்டில் இருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டது என்பதே இதன் சிறப்பம்சம்.

படத்தின் இறுதியில் பேசும் அமிதாப் பச்சன, சினிமா தொழிலாளர்களுக்காக நிதி திரட்டும் வகையில் இத்திரைப்படம் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த குறும்படத்தை விளம்பரப் பட இயக்குனரான பிரசூன் பாண்டே இயக்க, கல்யாண் ஜுவல்லர்ஸ், சோனி டெலிவிஷன் நிறுவனம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் உதவியிருக்கின்றனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*