இனி சத்தம் போடாமல் இந்திய ரயில்கள் ஓடும் ! அசத்தல் மாற்றம்

இனி சத்தம் போடாமல் இந்திய ரயில்கள் ஓடும் ! அசத்தல் மாற்றம்

Loading...

டெல்லி :-

இரயில்கள் என்றாலே இந்தியாவை பொறுத்தவரை மிகவும் சத்தத்துடன் இயங்குவது வழக்கம், அது ஒலி மாசினை ஏற்படுத்துவதாகவும் மேலும் பயணிகளுக்கு பலவகையிலும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக குற்றசாட்டு இருந்துவந்தது, அதனை கருத்தில்கொண்டு இந்திய இரயில்வே நிர்வாகம் புதிய மாற்றத்தினை கொண்டுவந்துள்ளது.

Loading...

இனி வருகிற டிசம்பர் மாதம் முதல் சத்தமில்லாமல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு தொலைதூர ரயிலிலும் 2 பெட்டிகளில் ஜெனரேட்டர்களை பொருத்தவும் ரயில்வே நிர்வாகம் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.மேலும் புதிதாக ரயில்களில் கூடுதல் இருக்கை வசதிகளையும், அவற்றில் சில இருக்கைகளை மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கவும் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில்களில் பொருத்தப்படும் ஜெனரேட்டர்கள் மூலம் மின் சப்ளை பெற்று மின்சார ரயில்களை போன்று அதிக சத்தமில்லாத வகையில் ரயில்களை இயக்கவும், சத்தம் ஏற்படுத்தும் இயந்திரங்களுக்கு விடை கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சத்தமில்லாத இரண்டு ஜெனரேட்டர்களில் ஒன்று வழக்கமான பயணத்திற்கும், மற்றொன்று அவசர காலத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.என்றும் தெரிவித்தார்.

ஒரு ஜெனரேட்டர் சரக்குகள் ஏற்றும் பெட்டிக்கு பின்புறமும், மற்றொன்று காவலர்களுக்கான பெட்டிக்கு பின்புறமும் பொருத்தப்பட உள்ளது. அத்துடன் மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டியில் 31 கூடுதல் இருக்கைகள் சக்கர நாற்காலியில் பயணிப்பவர்களுக்காக அமைக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள ரயில்களில் 105 டெசிபெல் சத்தம் வெளியிடப்படுகிறது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை குறைப்பதற்காக அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ரயில்களின் சத்தம் 33 டெசிபலுக்கு குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*