வல்லரசு நாடுகளின் பட்டியலில் இந்தியா இனி G -7 அல்ல G -8 வெளிநாட்டு பயணத்தை கிண்டல் செய்தவர்கள் இப்போ தெரிகிறதா

ப்ரான்ஸ் :-

Loading...

G7 மாநாட்டில் உறுப்பு நாடாக இந்தியா இல்லை என்றாலும் தாங்கள் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்.

G7 நாடுகளில் ரஷ்யா மற்றும் சீனா கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமே உள்ளன.

வளர்ச்சி பெற்று வரும் மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியா இன்று G7 மாநாட்டில் முக்கியமான இடத்தை வகிக்கிறது…மேலும் காஷ்மீர் பிரச்சனை, சட்டப் பிரிவு 370 ரத்து குறித்து இந்தியா – பாகிஸ்தான் பேசி தீர்த்து கொள்ளும் என்றும், காஷ்மீரில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்கா அதிபர் கூறியதுடன் மத்தியஸ்தம் செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கினார் டிரம்ப்.

இதில் முக்கியமாக ஐநா சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி, அடுத்து ஜி -7 நாடுகளின் அமைப்பில் இந்தியாவை ஒரு அங்கமாக கொண்டு வர வேண்டும் என்று இந்த 7 வல்லரசுகளும், மற்றும் ரஷ்யாவும் நினைக்கிறது. ஆனால் சீனா மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது

மேலும் இந்தியாவை ஜி -7 அமைப்புக்குள் கொண்டு வர வைத்து அந்த அமைப்பை ஜி-8 ஆக மாற்ற வேண்டும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நினைக்கிறார்…

ஜி-7 நாடுகளின் அமைப்பில் இந்தியா நுழைவதன் மூலமாக எதிர் காலத்தில் இந்தியாவின் அடையாளம் நிச்சயமாக மாறி விடும். வளர்ந்த நாடுகள் என்கிற பெயரை இந்தியா பெற்று விடும்.இதன் மூலமாக ஐநா சபையில் நிரந்நர உறுப்பினர் என்கிற இந்தியாவின் கனவும் விரைவில் நனவாகும்.

ஜி -7 அமைப்பு என்றால் என்ன

ஜி-7 என்பது முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், ஏழு நாடுகளை கொண்ட அமைப்பு. இதில், பிரான்ஸ் , அமெரிக்கா , ஜப்பான் , ஜெர்மனி , பிரிட்டன் , கனடா , இத்தாலி ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.சரியாக கூற வேண்டும் என்றால் அமெரிக்க நேச நாடுகளின் கூட்டமைப்பு என்று ஜி-7 அமைப்பினை கூறலாம்.

உண்மையிலேயே இது அமெரிக்காவின் ஐடியாவின் மூலமாக உருவான அமைப்பு தான்.
அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் சோவியத் யூனியனை உலக அளவில் தனிமை படுத்த ஒரளவு பொருளாதார ரீதியில் வலிமையாக இருக்கும் நாடுகளை ஒன்றினைக்க விரும்பினார்.

1973 ல் மார்ச் 25 ல் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இங்கிலாந்து, ஜப்பான், மேற்குஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்களை அழைத்து முதலாளித்துவ கொள்கைகளை உலகளவில் முன்னெடுத்து செல்ல அமெரிக்கா ஆலோசித்ததன் விளைவு தான் இந்த ஜி-7 அமைப்பு.

ஆரம்பத்தில்.1975 ல் ஜி-5 வாக செயல்பட ஆரம்பித்து அதற்கு பிறகு. 1976ம்ஆண்டில் இத்தாலியும் 1977 ல் கனடாவும் வந்து சேர்ந்ததால் ஜி-7 ஆக இந்த 7 நாடுகள் கொண்ட அமைப்பு பெயர் பெற்றது.

அந்த காலத்தில் உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக இருந்த சோவியத் யூனியனையோ அல்லது 8 வது பொருளாதார நாடாக இருந்த சீனாவையோ இந்த அமைப்பின் உள்ளே ஜி-7 நாடுகள் அனுமதிக்காததன் மு க்கிய காரணமே முதலாளித்துவ நாடுகளுக்கும் கம்யூனிச நாடுகளுக்கும் இருந்த போட்டியே காரணம்.

ஆனால் 1991 ல் சோவியத் யூனியன் சிதைந்து ரஷ்யாவாக பரிணாமம் பெற்ற பிறகு உலகளவில் தன்னுடைய அடையாளத்தை காண்பிக்க விரும்பிய ரஷ்யா தொடர்ந்து ஜி-7 நாடு களின் தலைவர்களிடம் நாங்கள் கம்யூனிசம் கிடையாது மக்கள் ஆட்சி தான் எங்கள் நாடு என்று சொல்ல 7 நாட்டு தலைவர்களும் ரஷ்யாவை 1998 ல் ஜி-7 அமைப்பில் சேர்த்து கொண்டதால் ஜி-8 நாடுகள் அமைப்பு உரு
வானது.

ஆனால் ரஷ்யாவுக்கு உக்ரைன் நாட்டுடன்
இணைந்து இருந்த கிரிமியாவின் மீது ஆசைகள் வர உக்ரைன் நாட்டுக்கு அல்வா கொடுத்து ரஷ்யா, கிரிமியாவை அபகரித்து கொ ண்டதால் .ஜி-7 நாடுகள் ஒன்று சேர்ந்து ஜி-8 அமைப்பில் இருந்து ரஷ்யாவை 2014 மார்ச் மாதம் வெளியேற்றினார்கள்

காமெடி என்னவென்றால் 2014 ம்ஆண்டுக்கான ஜி-8 நாடுகளின் மாநாடு ரஷ்யாவில் தான் நடைபெற இருந்தது. ஆனால் அதற்குள்ளே அமெரிக்காவின் ஆலோசனைப்படி ரஷ்யாவை நீக்கி விட்டார்கள். ரஷ்யா ஜி-8 ல் இருந்து வெளியேறிய காலத்தில் தான் இந்தியாவின் பிரதமராக மோடி உலக அரங்கில் அடி எடுத்து வைக்கிறார்.

அப்பொழுதே மோடி ஜி-7 அமைப்பில் எப்படியாவது இந்தியாவை நுழைத்து விடுவது என்று வைராக்கியத்துடன் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். மோடி பிரதமராக வரும் பொழுது இந்தியா உலக பொருளாதார வரிசையில் 10 வது இடத்தில் இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் தீவிர முயற்சியினால் 6 வது இடத்திற்கு வந்து விட்டது.

இந்தியாவுக்கு முந்தைய இடத்தில் அதாவது 9 வது இடத்தில் இருந்த இத்தாலி, 8 வது இட த்தில் இருந்த ரஷ்யா, 7 வது இடத்தில் இருந்த பிரேசில், 6 வது இடத்தில் இருந்த பிரான்ஸ், ஆகிய நாடுகளை ஓரங்கட்டி விட்டு இந்தியா இப்பொழுது 6 வது இடத்தில் இருக்கிறது. 5 வது இடத்தை கூட இந்தியா இங்கிலாந்திடம் இருந்து விரைவில் பெற்று விடும்.

உலகில் கோடீஸ்வரர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியா இப்பொழுது 3 வது இடத்தில் இருக்கிறது. இந்தியா ஜி-7 என்கிற முன்னேறிய நாடுகளின்அமைப்பில் நுழைவதற்கு இது போதுமே.. அது மட்டுமல்லாது ஜி-7 நாடுகளை போல இந்தியாவும் சோசலிச கொள்கைகளை ஓரம் கட்டி விட்டு முதலாளித்துவ கொள்கைகளையே முன்னெடுத்து வரு கிறது.

ஜி-7 அமைப்பில் இருந்த நாடுகள் ஒரு காலத்தில் அமெரிக்காவின் அடிமைகளாக இருந்தன. ஆனால் மோடி இந்தியா பிரதமராக வந்தபிறகு ஜி-7 அமைப்பில் உள்ள பல நாடுகள் இந்தியாவின் நண்பர்களாக மாறிவிட்டன.

அதனால் இந்தியாவை ஜி-7 அமைப்பில் இழுக்க பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் முனைந்து செயல்பட்டு வருகின்றன.

அதனால் வெகு விரைவில் இந்தியா ஜி-7 நாடுகளின் அமைப்பில் இணைந்தது என்கிற செய்தி வரலாம். அனேகமாக அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி-7 மாநாடு விரைவில் ஜி-8 மாநாடாக மாற வாய்ப்புகள் இருக்கிறது. இது தான் மோடியின் இப்போதைய லட்சியம். இதை நோக்கியே இப்பொழுது சென்று கொண்டு இருக்கிறார். இதனை கருத்தில் கொண்டே தற்போதைய வெளிநாட்டு பயணங்களை மோடி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது நிறைவேறும் பொழுது ஆசிய கண்டத்தி ன் மிகப்பெரிய சக்தியாக இந்தியா மாறிவிடும்

ஜி-7 மாநாடுகளை வெளியில் நின்று வேடிக்கை பார்த்து வந்த இந்தியாவை ஜி-7 அமைப்பு நாடுகளுக்கு தலைமை தாங்க வைத்தவர் மோடி என்று இந்திய வரலாறு அடுத்து வரும் அத்தியாயத்திலும் மோடியின் பெயரை குறிப்பிடும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்தியா வல்லரசு நாடுகள் பட்டியலில் இணைவதன் மூலம் ஆசியாவின் நிரந்தர தலைவனாக உருமாறும் என்று இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

full credit – விஜயகுமார் அருணகிரி, காலாவதி கலா

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*