இந்திய இராணுவ சட்டத்தில் அதிரடி திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு !!

இந்திய இராணுவம் உலகில் மூன்றாவது மிக பெரிய இராணுவம், 130 கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்களின் போது கணிசமான தொகை இராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிறது.

Loading...

மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு சீர்திருத்தங்களை இராணுவத்தில் செய்து வருகிறது, இந்திய இராணுவ வீரர்களுக்கு தேவையான உடைகள் மற்றும் காலணிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் பாஜக ஆட்சிக்கு பின் இந்தியாவிலேயே தற்போது தயாரிக்கப்பட்டு இராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது.

தற்போது இராணுவ சட்டத்தில் மேலும் ஒரு சீர்திருத்தம் செய்யும் விதமாக இளைஞர்களுக்கு மூன்று ஆண்டுகள் இராணுவத்தில் பணிபுரியும் வாய்ப்பினை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது, விருப்பம் உடைய இளைஞர்கள் 3 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்ற விரைவில் இந்திய இராணுவ சட்டத்தில் மாற்றம் கொண்டுவரலாம் என கூறப்படுகிறது.

Loading...

இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ராணுவத்தில் திறமையான இளைஞர்களை சேர்க்க பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது குறுகிய கால சேவையாக, ராணுவத்தில் இணையும் இளைஞர்கள் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்

இராணுவத்தில் மேற்கொள்ள இருக்கும் 10 புதிய சீர்திருத்த திட்டத்தில், அதனை 3 ஆண்டுகளாக குறைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதற்கான திட்ட வரையறைகள் இறுதி செய்யப்படவில்லை இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் குறுகிய கால பணி என்பதால் இளைஞர்கள் ஆர்வமுடன் பணியாற்றுவார்கள் என்றும் நாட்டு பற்று வளர்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று மத்தியஅரசு கணக்கிட்டுள்ளது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2642 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*