#BREAKING பிரதமர் நேற்று குறிப்பிட்ட நிலையில் சட்டங்களில் அதிரடி மாற்றம் ! போராட்டம்களுக்கு இனி இடமில்லை !!

பிரதமர் மோடி கரோனா பாதிப்பு குறித்தும் எடுக்கப்பட கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க நேற்று இரவு 8 மணிக்கு அரசு தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

Loading...

அப்போது பிரதமர் மோடி குறிப்பிட்டது பின்வருமாறு :- அவர் உரையில் முக்கிய அம்சங்கள்:கடந்த 4 மாதங்களாக உலகம் முழுவதுமே கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றன. நமக்கு இது ஒரு புதிய அனுபவம், எதிர்பாராத பாதிப்பு.
உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாம் தற்போது முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.

கரோனா பாதிப்பு தொடங்கியபோது நம்மிடம் பிபிஏ கிட்கள் கிடையாது. ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் கிட்களை நாமே தயாரிக்கிறோம்.
கரோனாவுக்கு எதிரான போரில் நாம் கட்டாயம் வெற்றி பெறுவோம். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம். தொடர்ந்து முன்னேறுவோம். யாரையும் சார்ந்திராமல் செயல்படுவது இந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று. 130 கோடி இந்தியர்களும் இதற்காக உறுதி ஏற்போம்.

Loading...

கரோனா பாதி்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொருளாதார மீட்புக்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிட்டில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் கரோனா மீட்பு பணிகளுக்கு செலவிடப்படும்.

பொருளாதார மீட்பு நடவடிக்கைான திட்டங்கள் மற்றும் ஊரடங்கு பெரும் தளர்வுகளுடன் மீண்டும் அமல்படுத்தப்படும். மாநில அரசின் முடிவுகளின் படி இது இருக்கும். இதுகுறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். என பிரதமர் நேற்று இரவு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி குறிப்பிட்டதில் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது சுயசார்பு பொருளாதாரம், இதன் மூலம் நாம் எந்த நாட்டினையும் எதிர்பார்க்காமல் நம்மை நம்பியே வலிமையாக செயல்பட முடியும் மேலும் 21 நூற்றாண்டில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக திகழும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில்தான் தற்போது மிக பெரிய மாற்றத்திற்கு இந்தியா தயாராகிவிட்டது, கொரோனா பெரும் தொற்றின் காரணமாக உலக நாடுகள் பல பொருளாதாரத்தையும், மக்களையும் இழந்துள்ள நேரத்தில் சீனா மீது கடுமையான எதிர்ப்பில் உள்ளனர், இந்நிலையில் சீனாவில் செயல்படும் தங்கள் நாடுகளை சேர்ந்த தொழிற்சாலைகளை சீனாவில் இருந்து வெளியேற அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சீனாவில் இருந்து வெளியேற நினைக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவிற்கு கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, அப்போது பல தொழில் முனைவோர்கள் குறிப்பிட்டது என்னவென்றால் சீனா மீது வெறுப்பு இருந்தாலும் அங்கு செல்ல காரணம் அந்நாட்டின் சட்டமே, போராட்டம் எல்லாம் எளிதாக நடத்தமுடியாது மேலும் கம்பெனியை மூடும் நடவடிக்கை இருக்காது என தெரிவித்தனர்.

இந்தியாவில் தொழிற்சாலைகளை கொண்டுவருவதில் எங்களுக்கு இருக்கும் ஒரே தயக்கம் உங்கள் நாட்டில் நடைமுறையில் இருக்கும் காலாவதியான தொழிற்சாலை சட்டங்கள்தான் எனவும் மேற்கோள் காட்டியுள்ளனர், இதனை கருத்தில் கொண்டு மிக பெரிய சீர்திருத்த நடவடிக்கைக்கு மத்திய அரசு தயாராகிவிட்டது.

அதில் முதற்படியாகத்தான் உத்திர பிரதேச மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு தொழித்துறை சட்டங்களை நிறுத்தி வைத்துள்ளது, இதே போல் நாடு முழுவதும் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது, இதானால் சீனாவை காட்டிலும் இந்தியா பொருளாதார தாக்கம் அதிகமுடைய நாடாக மாறும்.

அதே நேரம் உலக நாடுகள் இந்தியாவின் பக்கம் நிற்கும் நிலையும் உண்டாகும், இதன் மூலம் இந்தியர்களின் பொருளாதார மதிப்பு உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது, இன்று நிதியமைச்சகம் சார்பில் மிக பெரிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது 20 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவிக்க இருக்கிறது மத்திய அரசு.

இதன் பின்னணியில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் காலம் காலமாக தொழித்துறை சட்டங்கள் என அரசு அலுவலர்கள், தொழிலாளர்கள் என அரசை மிரட்டி வந்தது இனி நடக்காது என உறுதியாக கூறப்படுகிறது, அப்துல் காலம் 2020 இந்தியா வல்லரசாக மாறும் என நம்பிக்கை ஒளி ஏற்றி இருந்தார், இந்நிலையில் 21 நூற்றாண்டு இந்தியா உலகிற்கு தலைமை தாங்கும் என பிரதமர் மோடி கூறியிருப்பது கொரோனவால் முடங்கி கிடக்கும் இந்தியர்களுக்கு புது ரத்தத்தை பாய்ச்சியுள்ளது.

©TNNEWS24

Loading...
About Tnnews24 2639 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*