இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதா ? எல் ஐ சி மூலம் கொடுத்த பதிலடி அடங்கிய தமிழக ஊடகங்கள் !

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதா ? எல் ஐ சி மூலம்  கொடுத்த பதிலடி அடங்கிய தமிழக  ஊடகங்கள் !

தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள், அரசியல்வாதிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோர் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக இடைவிடாமல் சொல்லிவருவதோடு விவாதங்களும் நடைபெற்று வருகின்றன, மத்திய அரசு சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நாடுகளில் நிலவும் மந்தநிலையே இதற்கு காரணம் என்றும் அமெரிக்கா, சீனா நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால் இதனை ஏற்காமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர், ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி அடைந்துவிட்டதாக கூறி நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் வீழ்ச்சி அடைந்ததாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது இந்தியா அதில் இருந்து தன்னை தற்காத்து கொண்டது, அதற்கு காரணமாக சொல்லப்பட்டது இந்தியர்களின் சேமிக்கும் பழக்கமே அதாவது பணத்தினை வங்கிகள், தபால் நிலையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், இன்னும் பல வழிகளில் பணத்தினை சேமிப்பதே இந்திய பொருளாதாரத்தை காப்பதாக அப்போதைய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் தெரிவித்தது.

Loading...

அதனை அடிப்படையாக கொண்டு இந்தியர்களின் சேமிப்பு திறன் என்ன வென்று எல் ஐ சி மூலம் தற்போது விமர்சகர்கள், ஊடகங்கள், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பின்வருமாறு A. விஜயகுமார் அவர்கள் விளக்கியுள்ளார்.

Loading...

எங்கு பார்த்தாலும் ஆட்டோமொபைல் இன்டஸ்ட்ரீஸ் வீழ்ச்சி கார் உற்பத்தி சரிந்து
கார் விற்பனை வீழ்ந்தது.ஆட்டோ மொபைல் தொழிற் சாலைகளில் ஆட் குறைப்பு என்று
பரவும் செய்திகளால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் இருப்பது போன்ற செய்திகளால் பொது மக்கள் குழம்பி நிற்கிறார்கள்.

இந்திய பொருளாதாரம் மோடி ஆட்சியில் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்றதொரு தோற்றத்தை பிஜேபி எதிர்ப்பாளர்கள் மக்களிடையே உருவாக்கி வருகிறார்கள். இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று பார்ப்போம்.,

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த ஆயுள் காப்பீட்டு துறையையே உதாரணமாக எடுத்து
வைக்கிறேன்.ஆயுள் காப்பீடு ஒவ்வொருவரின் வாழ்விலும் அவசியமானதுதான் என்றாலும் அத்தியாவசியமானது அல்ல என்று
உறுதியாக கூற முடியும்.அது ஒரு நீண்ட
கால சேமிப்பு .

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றால் ஆயுள் காப்பீடு துறை எப்படி இந்த ஆண்டில் வளர்ச்சியில் இருக்க முடியும்?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில்மட்டும் இந்தியாவில் உள்ள 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் ₹ 23,554.94 கோடி புதிய பாலிசிகளை விற்றதற்காக கிடைத்துள்ளது.இது கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதத்தில் ₹18,639.29 கோடியாக இருந்தது.அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட்மாதத்தை விட இந்த. ஆண்டு 26.37 % சேமிப்பு அதிகரித்துள்ளது.

நாட்டில் 24 நிறுனங்கள் ஆயுள் காப்பீடு துறையில் போட்டியில் இருந்தாலும் என்றும் நம்பர்-1 ஆக இருப்பது எல்ஐசி மட்டும் தான். இந்த எல்.ஐ.சிக்கு
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிய பாலிசிகளை விற்றதன் மூலமாக கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? ₹17,114.32 கோடி ர

இதே எல்ஐசிக்கு கடந்த 2018 ம்ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதிய பாலிசிகளை விற்றதன் மூலமாக கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா ? 13,122.12 கோடி ரூபாய்.

நாட்டில் பொருளாதாரம் படு பாதாளத்தில் இருக்கிறது என்று பிஜேபி எதிர்ப்பாளர்கள்
கூறும் நிலையில் ஆயுள் காப்பீட்டு துறையில்
எல்ஐசி நிறுவனம் மட்டும் கடந்த 2018 ம்
ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் விற்பனையான பாலிசிகளின் மூலம் கிடைத்த வருமானத்தை விட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 30.42 % வளர்ச்சி அடைந்துள்ளது எப்படி?

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி என்றால் அத்தியாவசியம் இல்லாத ஆயுள் காப்பீட்டுதுறையில் எப்படி இந்த ஆண்டில் கடந்த மாதம் வளர்ச்சி இருக்க முடியும்?

இந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் புதியதாக விற்பனையான பாலிசிகளின் மூலமாக ஆயுள் காப்பீட்டுதுறை 21,509.25 கோடி ரூபாயை பெற்றுள்ளது.இது கடந்த 2018ம் ஆண் டு ஜூலை மாதத்தில் 20,219.26 கோடி ரூபாயாக இருந்தது. இதில் எல்ஐசிக்கு ஜூலை மாதத்தில் விற்ற பாலிசிகளின் மூலமாக கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா? 15,311.87 கோடி ரூபாய்.

கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் எல்ஐசிக்கு புதிய பாலிசிகளின் மூலமாக கிடைத்த வருமானம்14,851.77 கோடி ரூபாயாகும்.
அதாவது கடந்த ஜூலை மாதத்தில் மட்டும்
சுமார் 500 கோடி ரூபாய் முதல் பிரீமியம் வருமானமாக கடந்த ஆண்டு ஜூலையை விட இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் எல்ஐசி
நிறுவனம் பெற்றுள்ளது.

மேலும் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.கடந்த 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் எல்ஐசிக்கு புதிய பாலிசிகளை விற்ற தன் மூலமாக 11,167.82 கோடி ரூபாய் தான்
கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 26,030.16 கோடி ரூபாய் அளவிற்கு
எல்ஐசிக்கு புதிய பாலிசிகளை விற்றதன்
மூலமாக கிடைத்துள்ளது.அதாவது 133 % அதனுடைய விற்பனை கடந்த 2018 ஜூன்
மாதத்தை விட இந்த ஆண்டு ஜூன் மாதம்
அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 24 ஆயுள் காப்பீட்டு நிறு வனங்களும் 2018 ஜூன் மாதத்தில் பாலிசிகளை விற்பனை செய்ததன் மூலமாக கிடைத்த 16,611.57 கோடிகளை விட இந்த
ஆண்டு ஜூன் மாதத்தில் 32,241.33 கோடிகளை பெற்று 94.09 சதவீதம் வளர்ச்சி அடை ந்து இருந்தது.

இந்த வருடம் ஏப்ரல்மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரை 5 மாதங்களில் மட்டும் இந்தியாவில் விற்பனையான புதிய பாலிசிகளின்
மூலமாக மட்டுமே இந்திய ஆயுள் காப்பீட்டுற்றுள்ளதுத்துறை 10,5701.42 கோடி ரூபாய்களை பெற்றுள்ளது. அதாவது சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை
இந்த ஆண்டின் 5 மாதங்களில் மட்டும் மக்கள்
அத்தியாவசியம் இல்லாத ஆயுள் காப்பீட்டு
துறையில் சேமிப்பாக மக்கள் முதலீடு செய்துள்ளார்கள்.

இதில் எல்ஐசியில் மட்டும் 77,220.97 கோடி
ரூபாய்களை மக்கள் முதலீடு செய்துள்ளார்கள்.இதே எல்ஐசி யில் கடந்த 2018 ம் ஆண்டு
ஏப்ரல்- ஆகஸ்ட் முடிய உள்ள 5 மாதங்களில்
52,701.86 கோடி ரூபாய்களை மட்டுமே முதலீடு செய்து இருந்தார்கள்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ஏப்ரல்- ஆகஸ்ட் முடிய 5 மாதங்களில் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாயை
அதிகமாக முதலீடு செய்துள்ளார் கள்

இதே மாதிரி கடந்த 2018 ம்ஆண்டில் இதே ஏப்ரல் -ஆகஸ்ட் வரை 5 மாதங்களில் மட்டும் 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் 75,588.34
கோடி ரூபாய் அளவிலேயே புதிய பாலிசிகளின் மூலமாக வருமானம் பெற்றார்கள். ஆனால் இந்த ஆண்டில் 10,5701.42 கோடி
ரூபாய்களை பெற்றுள்ளார்கள்.

பாருங்கள் கடந்த நிதி ஆண்டை விட இந்த
நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும்
சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு
அதிகமான பணத்தினை மக்கள் அத்தியாவ சியம் இல்லாத ஆயுள் காப்பீட்டு துறையில் மக்கள் முதலீடு செய்துள்ளார்கள் என்கிற
பொழுது நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி என்று கூறுவது காமெடியாக இருக்கிறது.

…………………….
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி என்பது இந்தியர்களின் சேமிப்பு திறனை வைத்தே நம் நாட்டில் கணக்கிடப்படுகிறது அப்படி இருக்கையில் மக்கள் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமான பணத்தை சேமித்து வைத்திருக்கிறார்கள் எல் ஐ சி வருமானத்தை வைத்தே தற்போது எதிர்க்கட்சிகளின் குற்ற சாட்டிற்கு தகுந்த பதிலடியை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவற்றை தமிழக ஊடகங்கள் மக்களிடம் சொல்லுமா என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்?

இந்நிலையில் சேமிப்பு புள்ளிவிவரங்களை காரணம் காட்டி ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் மத்திய அரசை குற்றம் சுமத்தி வந்த சூழ்நிலையில் தற்போது அதனை வைத்தே பதிலடி கொடுக்கப்பட்டதால் ஊடகங்கள் வாயடைத்து போயுள்ளன.

Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *