இந்திய இராணுவம் குறித்து அவதூறு சீமானுக்கு நோட்டீஸ் ! சிக்கிவிட்டார் சீமான் !!

இந்தியா சீனா இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் இந்திய மக்களை அதிர்ச்சியடைய செய்தது, எல்லையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தார்கள் என்ற செய்தி இந்திய மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது, இதில் தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் பழனியும் ஒருவர்.

Loading...

இந்நிலையில் இந்திய சீனா எல்லையில் என்ன நடக்கும் என்று உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வந்தன, உலகின் பல நாடுகளும் சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தன, இந்த சூழலில்தான் இந்தியாவில் உள்ள சில அரசியல் இயக்கங்கள் மறைமுகமாக சீனாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் இந்திய இராணுவம் குறித்து அவதூறுகளை பரப்பி வந்தனர்.

அதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான், சமீபத்தில் இணைய வழியே நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அரசை குற்றம் சுமத்தியவர், எல்லையில் இருக்கும் இராணுவ வீரன் எல்லாம் என் ஆளு இரவில் போன் செய்கிறான் அண்ணே துப்பாக்கி இருக்கு குண்டு இல்லை என்று குற்றம் சுமத்துவதாக கூறியிருந்தார்.

Loading...

சீமான் வழக்கமாக சொல்லும் கதைகளை போல இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது, இந்திய இராணுவம் குறித்து சீமான் கூறிய தகவல் உண்மையா என்பது குறித்து இராணுவம் பதிலளிக்க வேண்டும் அப்படி உண்மை இல்லாத பட்சத்தில் சீமானை கைது செய்யவேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் சீமானின் காணொளியுடன் சேர்த்து இராணுவ அமைச்சகத்திற்கு ‘ARMYFRIENDATAMILNADU அமைப்பு புகார் அளித்துள்ளது, இதற்கு விரைவில் சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் அனுப்பப்பட்டு உரியவரிடம் முறையான விசாரணை கேட்கப்படும் என்று பதில் கிடைத்துள்ளதாம்.

இந்நிலையில் சீமான் மீது தேச பாதுகாப்பிற்கு எதிராக கருத்துக்களை திட்டமிட்டு பரப்பி எதிரி நாட்டிற்கு உதவுதல், மக்களை இந்திய இராணுவத்திற்கு எதிராக திட்டமிடுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது, இதற்கு முன்னர் காஷ்மீர் பயங்கரவாத இயக்க தலைவர் யாசின் மாலிக் உடன் சீமான் தொடர்பில் இருந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக சீமான் கூறும் கதைகளை போன்று இந்திய இராணுவம் குறித்து பேசி இப்போது மிக பெரிய சிக்கலில் சிக்கி இருக்கிறார்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*