30 நாள் போருக்கு தயாராக இந்திய இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு !

30 நாள் போருக்கு தயாராக இந்திய இராணுவத்திற்கு அதிரடி உத்தரவு !

Loading...

இந்தியா மற்றும் சீனா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற 4 ம் கட்ட பேச்சு வார்த்தை 14 மணி நேரதிற்கு பிறகு தோல்வியில் முடிந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதனையடுத்து இந்திய இராணுவம் உடனடியாக 30 நாட்கள் சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளை எதிர்த்து போரிட தயாராக இருக்குமாறு முப்படைகளுக்கு அறிவுறுத்த பட்டுள்ளது.

மேலும் வருகிற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் எல்லைக்கு சென்று உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக இராணுவ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது, எல்லையில் என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Loading...

மேலும் சீன இராணுவதிற்கு எதிராக தென் சீனா கடலில் அமெரிக்கா தனது போர் கப்பல்களை நிறுத்தியுள்ளது, அதற்கு துணையாக இங்கிலாந்தும் தனது நாட்டில் உள்ள மிக பெரிய போர் கப்பலை தென் சீன கடலுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது, இந்திய இராணுவ தரப்பில் முன்னாள் அதிகாரிகள் கூறுகையில் இந்தியா அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் பகுதியில் முழு கட்டமைப்பை வலுப்படுத்தி வருவது..,

படைகள் அனைத்தும் சீனாவின் எல்லையில் 5 கிலோ மீட்டருக்கு முன்பு நிறுத்த பட்டு இருப்பதும் இந்திய இராணுவம் போருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி இருப்பதும் விரைவில் சீனாவிற்கு மிக பெரிய அடியை இந்தியா கொடுக்க இருப்பதாக கூறுகிறார்கள்.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3942 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*