சீன எல்லையில் போர் பதற்றம் ! பிரதமர் அவசர ஆலோசனை ! படைகள் குவிப்பு ! முழு விபரம்.

கடந்த சில நாட்களாக இந்தியா சீனா இடையே மோதல் போக்கு தொடர்கிறது. இது லடாக் யூனியன் பிரதேசத்தின் சீன எல்லை கட்டுப்பாட்டு கோடான LAC எனப்படும் Line of Actual Control அருகே நடக்கிறது. LAC-ன் இந்திய பகுதியான கால்வான் பள்ளதாக்கிற்கும் சோங்கோ ஏரியிக்கும் மறுபுறம் சீனா தனது People’s Liberation Army (PLA) படையை குவித்துள்ளது. இது மே மாதம் முதல் வாரத்தில் தொடங்கி தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்தியாவும் தனது படையை குவித்துள்ளது. மேலும் உத்திர கண்ட் மற்றும் பஞ்சாபில் இருக்கும் விமான படை தளங்களை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோணா நோயால் பாதிக்கப்பட்ட மனித குலம் தற்போது சீனாவின் அகம்பாவம் கொண்ட வெளியுறவு கொள்கையால் பாதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Loading...

மோதலுக்கு என்ன காரணம் ?
இந்தியா கடந்த சில வருடங்களாகவே தனது நீண்ட எல்லையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியான இந்திய ராணுவத்தின் BRO (Border Road Organisation) திட்டம் எல்லையில் ராணுவ வாகனங்களை விரைவில் எடுத்துச்செல்லும் வகையில் சாலைகளும், பாலங்களும், சுரங்களும் கட்டப்பட்டு வருகிறது. இது சீனாவை மிகவும் அச்சமடையச்செய்துள்ளது. காரணம் இந்த உட்கட்டமைப்பு பணிகளை இந்தியா வெற்றிகரமாக முடித்தால் இந்தியா தனது படைகளை விரைவில் எந்த இடத்திற்கும் அழைத்துச் செல்ல இயலும். இது ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜிட் – பல்டிஸ்தான் அக்ஷாய் சின்- னை மீட்க முயலும் போது போர் மூண்டால் அச்சமயத்தில் தனக்கு பாதகமாக அமையும் என கருதி சீனா இடைஞ்சல் செய்து வருகிறது.

மேலும் உலக நாடுகள் அனைத்தும் சீனாவால் பரப்பபட்ட கொரோணா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா இந்த இக்கட்டான சூழ்நிலையை பயன்படுத்தி தனது விரிவாக்க கொள்கை (Expansionist Policy) ஆட்சியை விரிவாக்கம் செய்ய முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா-சீனா LAC எல்லை கட்டுப்பாட்டு பகுதி, தென் சீனக் கடல் பகுதி (South China Sea), தைவான், மற்றும் ஹாங்காங் பகுதிகளில் சீனாவின் ஆக்ரோஷம் அதிகம் தென்படுகிறது.

Loading...

சீனா இந்தியாவிற்குள் நுழைந்ததா ?
இல்லை, சீனாவின் படைகள் 10 கி.மீ இந்திய பகுதிகளுக்கு உள்ளே நுழைந்ததாக சில செய்திகள் வந்தன. ஆனால் இது பொய்யான தகவல்களாகும். இதை இந்திய ராணுவமும் மறுத்துள்ளது. அப்படி நுழைந்தால் அது ஜெனீவா ஒப்பந்தத்தின் படி போர் குற்றமாகும்.

தற்போதைய நிலை என்ன ?
சீனாவின் இந்த படை குவிப்பு செய்தியை அறிந்ததும் நமது ராணுவமும் அதிவிரைவாக நமது படைகளை அனுப்பியது. தற்போதைய நிலையில் இந்தியா சுமார் 5,000 படை வீரர்களை கால்வான் பள்ளத்தாக்கு அருகே நிறுத்தியுள்ளது. மேலும் கள பீரங்கிகள், அதிபயங்கர பீரங்கிகள் என குவித்துள்ளது. மேலும் பதுங்கு குழிகளை அமைத்தும் வருகிறது. உத்திர கண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களிலிருந்து போர் விமானங்களும், போர் ஹெலிகாப்டர்களும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு முடிக்கிவிடப் பட்டுள்ளது. மேலும் புதிதாக வாங்கப்பட்ட சினூக் ரக ஹெலிகாப்டர்களை அருணாசலப் பிரதேசம் விஜயநகரா பகுதியில் வீரர்களை குவிக்க அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே அமேரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவான நிலையே எடுத்துள்ளன. இவர்களுடன் மற்ற ஐரோப்பிய நாடுகளும் தென் கொரியாவும் இணைந்து இந்தியாவை ஆதரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாகவே நாம் வெளியுறவு கொள்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதன் காரணமாகவே பிரதமர் மோடி அவர்கள் அதிக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்.

இந்தியா சீனா படை பலம் ஒப்பீடு.

எது எப்படியோ கொரோணா, வெட்டுக்கிளி படையெடுப்பு, சீன எல்லை பதற்றம் என எத்தனை சவால் வந்தாலும் இந்தியர்கள் அரசுக்கு ஆதரவளித்தும் உறுதுணையாக இருந்தும் நமது நாட்டின் ஒற்றுமையை காட்டி உலகை ஆச்சரியப்பட வைப்போம். நமது அரசுக்கு உறுதுணையாக அவர்களுக்கு நம்மால் ஆன உதவியை தர தயாராவோம். விரைவில் சீன ஆக்கிரமிப்பு காஷ்மீரான அக்ஷாய் சின், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான முசாபராபாத், கில்ஜிட்-பல்டிஸ்தான் இந்தியாவுடன் இணையும் என எதிர்பார்ப்போம்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*