Connect with us

#24 Exclusive

இந்திய இராணுவம் தாக்குதலால் மசூத் அசார் கொல்லப்பட்டதற்கு ஏன் பாக்., கொந்தளிக்கவில்லை? இதுதான் காரணம்

அமெரிக்காவிலே அடிமை முறைகள் இருந்தப்போ அங்கே ஒரு சம்பவம். அமெரிக்காவிலே தெற்கு மாகாணங்களிலே தான் அடிமை முறை இருந்தது. கருப்பு தோல் உடைய கறுப்பினத்தவரை வெள்ளைத்தோல் உடைய வெள்ளையர்கள் அடிமைகளாக விலங்குகள் போல் நடத்தினார்கள்.

விலங்குகள் என்றால் விலங்குகளை போலவே அடிமைகளை கொல்லலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் அடிமைகளும் மனிதர்கள் தானே எனவே பல அடிமைகள் அவ்வப்போது எதிர்ப்பார்கள். இப்படி பட்ட அடிமைகளை எட்வர் கோவே எனும் ஆளிடம் அனுப்புவார்கள் அவனும் அடித்து உதைத்து வழிக்கு கொண்டு வருவான்.

அப்படி ஒரு நாள் பிடெரிக் டக்ளஸ் எனும் 16 வயதான கருப்பின அடிமையை அவருடைய உரிமையாளர் இந்த எட்வர் கோவே எனும் ஆளிடம் அனுப்புகிறார்கள். கோவே உம் டக்ளஸை அடித்து உதைத்து துன்புறுத்துகிறான்.
ஒரு நாள் டக்ளஸுக்கு கோபம் வந்து திருப்பி சண்டையிடுகிறார். கோவே உம் விடுவதாக இல்லை சண்டை பலமாக நடக்கிறது. கடைசியிலே கோவே தோற்று வீட்டுக்குள்ளே ஓடுகிறான். சரி துப்பாக்கி எடுத்து வந்து நம்மை சுட்டுகொல்லப்போகிறான் என டக்ளஸ் மரண பீதியிலே உறைந்து போய் நிற்கிறார்.

Loading...

பல மணி நேரமாகியும் கோவே வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. அப்போது தான் டக்ளஸூக்கு விஷயம் புரிகிறது. நம்மை அடித்து உதைத்து மாற்ற முடியாமல் துப்பாக்கி எடுத்து வந்து சுட்டான் என்றால் இதுவரை அடிமைகளுக்கு கொடூரன் என பேர் வாங்கி வைத்திருக்கும் அவனுடைய பேர் கெட்டுவிடும் யாரும் அவனிடம் அடிமைகளை அனுப்பமாட்டார்கள். இந்த வரும் அடிமைகளை வைத்துத்தான் அவன் பொழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தான். அதுபோய்விட்டால் சோத்துக்கு பூவா தான் என புரிகிறது.

Loading...

இந்த சம்பவத்தை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் பாக்கிஸ்தான் தான் அந்த எட்வர் கோவே, இந்தியா தான் டக்ளஸ். பாலாகோட் தான் திருப்பி அடித்தது. அடிவாங்கியும் பல நூறு தீவிரவாதிகள் செத்தும் ஏன் பாக்., வாயைமூடி ஏன் இருந்தது என்றால்

நம்முடைய விமானப்படை உள்ளே புகுந்து தாக்கியது என பாக்., ஒப்புக்கொண்டால் அரபு நாடுகளிலே இருந்து வரும் பணம் ஏதும் வராது. அரபு நாடுகளுக்கு அரச வம்சத்திற்கு பாதுகாப்பு தருகிறோம் என அங்கே நிறுத்தியிருப்பது அல்ல கைகள்தான் வீரர்கள் அல்ல என தெரியவரும்.

மேலும் மக்களை ஏமாற்றி எல்லா பாக் ராணுவ அல்லக்கைகளும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது தெரியவரும். எனவே அடியை வாங்கிட்டு கம்முன்னு இருந்தார்கள் . அப்போதே சொன்னோம் மசூத் அசார் மர்கயா என. பலர் நம்பவில்லை, இப்போதுவரை மசூத் அசார் வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தது கிடையாது. அதுவும் குடும்பத்தோட. அந்த குடும்பமே தீவிரவாதிகள் மகன், மருமகன், மாமன் மச்சான் என.

இதே போல் ஒரு 5 நாள் நமது உளவுத்துறை, ராணுவத்திற்கு சுதந்திரம் கொடுத்தால் என்னாகும் என நினைத்து பாருங்கள், இதே போன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க சொன்னால் பத்தே நாளில் நமது ராணுவம் மீட்கும்.

:-ராஜாசங்கர்

Loading...

Trending