சமூக வலைதளத்தில் கசிந்த இந்தியன் 2 கதை… படக்குழுவினர் அதிர்ச்சி

சமூக வலைதளத்தில் கசிந்த இந்தியன் 2 கதை… படக்குழுவினர் அதிர்ச்சி

1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படம், பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ( இந்தியன் 2 ) சங்கர் இயக்கி வருகிறார். ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சித்தார்த், பிரியா பவானிசங்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நிறைய பேர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்தின் கதை கசிந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட கதையாவது, சித்தார்த் தனது மனைவியுடன் சேர்ந்து டியூசன் சென்டர் நடத்தி வருபவர், மேலும் அவ்வபோது ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை பற்றி சமூக வலைதளத்தில் அம்பலப்படுத்துபவர், அதனால் அவருக்கு பல மிரட்டல்கள் வருகின்றன. சித்தார்த்தின் இத்தகைய செயலை வெளிநாட்டில் இருக்கும் கமலஹாசன் பார்க்கிறார். அதனால் ஊழல் வாதிகளை வேட்டையாடுவதற்காக கமல் இந்தியா வருகிறார்.

இந்தியா வந்த கமலஹாசன், தனது மனைவிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சித்தார்த்தை சந்தித்து, ஊழல் வாதிகளின் பட்டியலை வாங்குகிறார். பிறகு தனக்கே உரிய வர்ம கலையால் அனைத்து ஊழல் வாதிகளையும் கொலை செய்கிறார். சித்தார்த்தும், காஜல் அகர்வாலும் அவருக்கு உதவியாக இருக்கிறார்கள். காஜல் அகர்வால் வர்மகலை பற்றிய ஆராய்ச்சி செய்பவராக நடிக்கிறார். வர்மம் மூலம் கொலை செய்யப்படுவதை அறிந்த போலீஸ் அதிகாரிகள், கமலை பிடிக்க தீவிரமாக இறங்குகிறார்கள். அதில் இருந்து கமல் தப்பிப்பாரா.. இல்லை இறப்பாரா என்பது தான் கசிந்த கதை. ஆனால் இது இந்தியன் 2 படத்தின் கதை தானா..? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை

Loading...
Loading...

Tnnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *