இந்தியன் 2 விபத்து – முக்கிய நபருக்கு ஜாமீன் !

இந்தியன் 2 விபத்து – முக்கிய நபருக்கு ஜாமீன் !

இந்தியன் 2 விபத்து – முக்கிய நபருக்கு ஜாமீன் !

கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ படத்தில் படப்பிடிப்பின்போது கடந்த 3 தினங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில் 3 பேர் பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருந்து நூலிழையில் இயக்குனர் ஷங்கர், கமல் மற்றும் நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் தப்பித்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகினர், தொழிலாளர்களுக்கான அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். இந்த கொடூர் விபத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

Loading...

இந்த விபத்திற்கு காரணம் கிரேன் ஆபரேட்டர் தான் என்றும் அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. சினிமாக்களுக்கு பயன்படுத்தும் கிரேன்களுக்கு பதிலாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் கிரேனைப் பயன்படுத்தியதால் அதிக எடை தாங்காமல் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து கிரேன் ஆபரேட்டர் ராஜன் இரு நாட்களுக்குப் பிறகு வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இப்போது அம்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Loading...
Loading...

24 Cinema

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *