Connect with us

முகப்பு

கெத்துகாட்டும் இந்திய மகளிர் அணி – உலகக்கோப்பையில் முக்கிய வெற்றி !

கெத்துகாட்டும் இந்திய மகளிர் அணி – உலகக்கோப்பையில் முக்கிய வெற்றி !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடர் லீக் போட்டிகளின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணியொல் ஷபாலி வர்மா மட்டும் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் சோபிக்காததால் இந்திய அணி 20 ஓவர்களுக்கு 133 ரன்கள் சேர்த்தது.

Loading...

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணியில் வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்களை விழுந்ததால் போட்டி இந்தியாவின் கைகளில் இருந்தது. கடைசி 2 ஓவர்களில் 34 ரன்கள் தேவைப்பட்டதால் இந்தியா எளிதாக வெற்றி பெற்றுவிடும் என நினைத்த நிலையில் அதிரடி திருப்பமாக அந்த அணியின் அமெலியா கெர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 19 ஆவது ஓவரில் அவர் 18 ரன்களை சேர்த்தார்.

Loading...

இதையடுத்து கடைசி ஓவரில் அணி வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டன. முதல் 5 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் சேர்த்தது நியுசிலாந்து. கடைசிப் பந்தில் நியூஸிலாந்து வெற்றி பெற 5 ரன்கள் தேவை என்கிற நிலைமை உருவானது. அந்த பந்தில் ஜென்சன் ரன் அவுட் ஆனதால்  இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா உலகக்கோப்பையின் அரையிறுதிக்கு முதன் முதலில் தகுதி பெற்றுள்ளது.

Loading...

Trending