Connect with us

முகப்பு

மகளிர் உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த இந்தியா !

மகளிர் உலகக்கோப்பை – ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த இந்தியா !

இன்று தொடங்கிய மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் அணிகளுக்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இதன் முதல் போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடைபெற்றது. டாஸை வென்ற ஆஸி. முதலில் பந்துவீச முடிவு செய்தது.

Loading...

களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நிதானமாக விளையாடினர். இதனால் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் தீப்தி ஷர்மா அதிகபட்சமாக 49 ரன்கள் சேர்த்தார். ஆஸி தரப்பில் ஜெஸ் ஜோனசான் 2 விக்கெட்களை அதிகபட்சமாகக் கைப்பற்றினார்.

Loading...

இதையடுத்து களமிறங்கிய நடப்பு சாம்பியனான ஆஸி அணியில் எல்லா வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அல்ஸியா ஹீலி 51 ரன்களும் மற்றும் அஷ்லே கார்ட்னர் 34 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். இதனால் ஆஸி. 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி உலகக்கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்றது.

இந்தியா சார்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்களும், ஷிகா பாண்டே 3 விக்கெட்களும் அதிகபட்சமாக எடுத்தனர். பூனம் யாதவ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending