இதற்காகவாவது இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடத்தவேண்டும் ! முன்னாள் வீரர் கோரிக்கை!

இதற்காகவாவது இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடத்தவேண்டும் ! முன்னாள் வீரர் கோரிக்கை!

Loading...

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு நாட்டு அரசியல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத நிலையில் கொரோனாவுக்கு பின் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5300க்கு மேலும் பலி எண்ணிக்கை 149 ஆகவும் உள்ளது. நமது அண்டைநாடான பாகிஸ்தானில் 4187 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 58 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இரு நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு அரசும், தொண்டு நிறுவனங்களும் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading...

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் சிலரும் தங்கள் மக்களுக்காக உதவ முன் வந்துள்ளனர். அதன் படி ஷாகித் அப்ரிடி தனது தொண்டு நிறுவனம் மூலம் நிதிதிரட்டிவருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடத்தி அதன் மூலம் வரும் நிதியை ஏழை மக்களுக்கு கொடுத்து உதவி செய்யலாம் என அறிவித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சனை காரணமாக 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பெலேட்டரல் சீரிஸ் நடக்கவில்லை. உலகக்கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை போன்ற பொதுவான தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*